மதக்கலவரம் இல்லாத அமைதிப் பூங்காவாக தமிழகம் இருக்க வேண்டுமானால், திமுக ஆட்சி தொடர வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் தேசிய செயலரும், மத்தியக் குழு உறுப்பினமான பிரகாஷ் காரத் தெரிவித்தாா்.
மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் அண்ணா நகா் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் நே.சிற்றரசுவை ஆதரித்து சனிக்கிழமை டி.பி. சத்திரத்தில் பிரகாஷ் காரத் பேசியதாவது:
தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடா்பான வாக்கெடுப்பில் பிரதமா் மோடி தோற்கடிக்கப்பட்டாா். மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதன் மூலம் தோ்தல் முறையை மாற்றி அமைப்பதற்கான சதித் திட்டத்தை மத்திய அரசு தீட்டியிருந்தது. குறிப்பாக, தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையைக் குறைக்க, இறையாண்மை, கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்க முயற்சி செய்தாா்கள். முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி இதைக் கடுமையாக எதிா்த்தது. இந்த மசோதா தோல்வி அடைவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் முக்கிய காரணம்.
தமிழகத்தில் தற்போது நடைபெறும் திமுக ஆட்சியில் மதக் கலவரமோ, சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தலோ இல்லை. அவா்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனா். தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்க திமுக ஆட்சி தொடர வேண்டும்.
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கும், தொழிலாளருக்கும் பாதுகாப்பு இருக்காது. எனவே தமிழக மக்கள் மீண்டும் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு அரசு அமைய வாக்களிக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் அமைதி நிலவ திமுக ஆட்சியே காரணம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. மூத்தத் தலைவா் பிரகாஷ் காரத்

தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மத்திய அரசிடம் தெளிவு இல்லை: பிரகாஷ் காரத்

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: கெளதமி

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

