பிரதமர் நரேந்திர மோடி கோவையில் சாலை வலத்தில் ஈடுபட்டுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, இன்று கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மாலை 6 மணிக்கு கலந்துகொள்கிறார்.
இந்நிகழ்வில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் தேர்தல் சிறப்புரை ஆற்ற உள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள கோவை வந்தடைந்த பிரதமர் மோடி தற்போது தொண்டர்கள் மற்றும் மக்களிடையே சாலை வலத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து, கொடிசியாவில் நடைபெறும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
நாடாளுமன்றத்தில் நேற்று பாஜக அரசு கொண்டு வந்த பெண்களுக்கான இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மற்றும் தொகுதி எண்ணிக்கை அதிகரிப்பு தொடர்பான மசோதா நிறைவேற்றம் தோல்வி அடைந்த நிலையில் இன்று பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசவிருப்பது பற்றி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Summary
Prime Minister Modi's Roadshow in Coimbatore!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி, ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது! பிரதமர் மோடி
சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய மோடி!

நாகர்கோவிலில் பிரதமர் மோடி சாலை வலம்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

