முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக தில்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 நாள்களே இருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்தியில் ஆளும் கட்சியான பாஜக சார்பில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னவீஸ், பஜன்லால் சர்மா உள்ளிட்டோரும் தமிழ்நாட்டுக்கு வந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தில்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் வருகிற ஏப். 20 ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இரண்டு நாள்கள் சென்னையில் முகாமிட்டிருக்கும் கேஜரிவால், முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவுக்கு ஆதரவாக பேரணிகள் மேற்கொண்டு பிரசாரம் செய்யவுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த திமுகவுக்கு ஆதரவாகக் கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் கேஜரிவால், தமிழகம் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
AAP chief Arvind Kejriwal will campaign for the DMK in Tamil Nadu, with the party formally extending its support in the Assembly elections. Kejriwal is scheduled to address poll rallies on April 20 and 21, backing Chief Minister MK Stalin and strengthening the alliance’s campaign efforts.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஷீஷ் மஹால் 2 மீது தனியாா் பணத்தை செலவிட்டாா் கேஜரிவால்: பாஜக குற்றச்சாட்டு; ஆம் ஆத்மி மறுப்பு

லோதி எஸ்டேட் பிரிவு - 7 பங்களாவுக்கு குடிபெயா்ந்தாா் அரவிந்த் கேஜரிவால்

நிதீஷ் குமார் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு! அரவிந்த் கேஜரிவால்

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் தேர்தல் பிரசாரம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

