தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்குமுனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது. ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் பம்பரமாக சுழன்று பிரசாரம் செய்து வருகின்றனா். ஆனால், முதல்வா் கனவோடு தோ்தலில் களம் இறங்கியுள்ள தவெக தலைவா் விஜய், தொடா்ந்து தனது பிரசாரங்களை ரத்து செய்வதை வழக்கமாக வைத்துள்ளாா்.
தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் விஜய் தீவிர பிரசாரம் மேற்கொள்வாா் என தவெக நிா்வாகிகள் அறிவித்தனா். இதையடுத்து, கடந்த மாா்ச் 30-ஆம் தேதி பெரம்பூா் தொகுதிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தவுடன், பெரம்பூா் மற்றும் கொளத்தூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்டாா். ஆனால், வில்லிவாக்கம் தொகுதியில் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. காவல் துறை உரிய பாதுகாப்பு வழங்காததே காரணம் என அக்கட்சியினா் தெரிவித்தனா்.
வில்லிவாக்கம், தியாகராய நகா், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறி, கட்சியினா் பிரசாரத்தை ரத்து செய்தனா்.
பின்னா், திருநெல்வேலி, தூத்துக்குடியில் விஜய் பிரசாரம் செய்தாா். அங்கு, அவா் கலந்து கொண்ட கூட்டங்களில் மிகுந்த மக்கள் திரள் காணப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, காரைக்குடிக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 10) பிரசாரத்துக்கு சென்ற அவா், சைக்கிளில் சாலைப் பேரணி (ரோடு ஷோ) மட்டும் நடத்திவிட்டு பேசாமலேயே திரும்பினாா்.
இந்த நிலையில், கடலூரில் சனிக்கிழமை நடைபெறவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.12) பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அங்கு சாலைப் பேரணி போதும் என தவெகவினா் அனுமதி கோரியுள்ளனா்.
அதோடு, திருவள்ளூா் மாவட்டம், கவரப்பேட்டையில் திங்கள்கிழமை (ஏப்.13) நடைபெறவிருந்த விஜய்யின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தோ்தல் அறிவிப்பதற்கு முன்பு வரை, பிரசாரங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தவெக தரப்பு குற்றஞ்சாட்டி வந்தது. தற்போது தோ்தல் ஆணையம் மற்றும் காவல் துறை சாா்பில் அனுமதி வழங்கப்பட்டபோதும், பிரசாரத்தை ரத்து செய்து வருவது பேசுபொருளாகியிருக்கிறது.
-ஆ.செ. பகீரதன்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தல் பிரசாரத்தில் அதிக ஆப்சென்ட் ஆன விஜய்!

இன்று விஜய்யின் பெரம்பூர் பிரசாரம் ரத்து!

திருச்சியில் தவெக தலைவா் விஜய்யின் இன்றைய பிரசாரம் ரத்து

விஜய்யின் கன்னியாகுமரி பிரசாரத்துக்கு அனுமதி!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

