விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

என்னைப் புதைத்தாலும், எனது திட்டங்களைப் புதைக்க முடியாது! - முதல்வர் ஸ்டாலின்

என்னைப் புதைத்தாலும், எனது திட்டங்களைப் புதைக்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதைப் பற்றி....

News image

முதல்வர் ஸ்டாலின். - படம்: எக்ஸ்.

Updated On :9 ஏப்ரல் 2026, 6:55 pm IST

என்னை புதைத்தாலும், எனது திட்டங்களைப் புதைக்க முடியாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டில் பிரசாரம் மேற்கொண்டுள்ள தமிழ்நாட்டு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளருமான செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், திமுக எம்.பி. டி.ஆர். பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மறைமலைநகரில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “அறிஞர் அண்ணாவில் பிறந்த மண்ணான ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மண்ணுக்கு உங்களின் ஆதரவோடு வாக்கு சேகரிக்க வந்திருக்கிறேன்.

இங்கு எங்கு பார்த்தாலும் தொழிற்சாலைகள். இளைஞர்களுக்கு எங்கு பார்த்தாலும் வேலைவாய்ப்புகள், இதனையெல்லாம் கொண்டுவந்தது யார்?. இதனைக் கொண்டுவந்தது திமுக.

அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு காஞ்சிபுரமும், செங்கல்பட்டும் ரெடியாக இருக்கிறீர்களா?. இன்றைக்கு பாதி தமிழ்நாட்டை சுற்றி வந்துவிட்டு மூன்றாம் கட்ட பயணத்தை நாளை நான்காம் கட்ட பயணத்தைத் தொடங்க விருக்கிறேன்.

ஒவ்வொரு நொடியும் தமிழ்நாட்டில் தலையெழுத்தைத் தீர்மானிக்க யோசித்துக் கொண்டே இருக்கிறேன். தில்லியின் ஆணவத்திற்கு அடிபணியக் கூடாது என்று வெயிலையும் பொருள்படுத்தாமல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் வந்து கலந்து கொண்டிருக்கிறீர்கள்.

நான் கொண்டுவந்த திட்டங்களை மண்ணில் புதைக்கும் துணிச்சல் யாருக்கும் இல்லை. நீங்கள் என்னைப் புதைத்தாலும், என்னுடைய திட்டங்களைப் புதைத்திட முடியாது.

தமிழ்நாட்டின் வளர்ச்சியை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி எப்போது என்னைப் பற்றி அவதூறு மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார். என்னுடைய மரணத்தைப் பற்றியும் அவர் விரும்பி பேசியிருக்கிறார்.

நான் முதல்வராக வந்தவுடன் முதல் கையெழுத்தே மகளிர் இலவசப் பேருந்துக்கும், மகளிர் உரிமைத் தொகைக்கும் போட்டேன். இந்த அனைத்துக்கும் கையெழுத்துப் போட்ட நான் மண்ணுக்குள் போக வேண்டுமாம். மகளிர் உரிமைத் தொகையால் 1.30 கோடி மக்கள் பயன்பெறுகின்றனர்.

குழந்தைகள் அனைவரும் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்று காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் என அவர்களின் வெற்றியைப் பார்த்துப் பெருமைப்படுகிற நான் கரோனாவில் போயிருக்க வேண்டுமாம். நான் கரோனாவில் போயிருக்க வேண்டுமாம். மாதந்தோறும் உரிமைத் தொகை கொடுத்த நான் இல்லாமல் போகனுமாம். இந்த மாதிரியான திட்டங்களை செயல்படுத்தும் நான் மண்ணுக்குள் போகனுமாம்.

நான் மண்ணுக்குள்ளே போனாலும், என்னுடைய திட்டங்களை யாரும் மண்ணுக்குள் தள்ள முடியாது” என்றார்.

Summary

Chief Minister Stalin has stated that even if he is buried, his plans cannot be buried.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.