மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்பதாக விஜய் தெரிவித்தது பற்றி...

News image

விஜய் - Youtube: TVK

Updated On :8 ஏப்ரல் 2026, 1:26 pm IST

தமிழ்நாடு காங்கிரஸை ஸ்டாலின் வாங்கிவிட்டார், ஆனால் உண்மையான காங்கிரஸ் நம்முடன் நிற்கிறது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

”தற்போது திமுக கையில் முழு அதிகாரமும் இருந்திருதால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. முட்டுக்கட்டைப் போட்டி வரவிடாமல் செய்திருப்பார். தற்போது அதிகாரம் இல்லாத முதல்வராக இருப்பதால் நான் வந்துள்ளேன்.

திமுக கூட்டணியும் பாஜக கூட்டணியும் வெளியேதான் தனித்தனியாக இருப்பார்கள். இவர்கள் இருவருக்கும் ஒரே நோக்கம்தான். உங்களுக்காக உழைக்க இந்த விஜய் வந்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களின் நோக்கம்.

விஜய் வந்தபிறகு அவர்களால் ஊழல் செய்ய முடியவில்லை. அதனால் கோபத்தில் உள்ளார்கள். மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாத சூழலை நீங்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.

கூட்டணிக் கட்சிக்காரர்களே ஒருத்தருக்கு ஒருவர் ஓட்டு போட மாட்டார்கள் போல. பாஜக தலைமை அதற்கும் மேலாக இருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸை சில கோடிகளை கொடுத்து பையில் போட்டுள்ளார்கள். உண்மையான காங்கிரஸ் நம்முடன் நிற்கிறது. சிறுபான்மையினர் மக்களிடம் திமுக சாயம் வெளுத்துவிட்டது. சிறுபான்மையினர் மக்கள் நம் பக்கம் நிற்கிறார்கள் என்று கடுப்பில் இருக்கிறார்.

கட்சி ஆரம்பித்துவிட்டு ஒவ்வொரு வீட்டுக்குள் நான் போகவில்லை. வீட்டுக்குள் போன பிறகுதான் கட்சி ஆரம்பித்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

Summary

The true Congress stands with the TVK! — Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.