மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே வேட்புமனு தாக்கல்: பாஜக துணைத் தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்!

பாஜக தெற்கு மாவட்ட துணைத் தலைவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது பற்றி..

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 12:11 pm IST

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தஞ்சாவூர் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தஞ்சாவூர் தொகுதிக்கு பாஜக வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட துணைத்தலைவர் முரளிதரன் கடந்த 30 ஆம் தேதி சுயேச்சையாக வேட்பு மனுத் தாக்கல் செய்தார். கட்சித் தலைமை வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பு சுயேச்சையாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்து தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது பேசிய அவர் தஞ்சாவூர் தொகுதி வேறு எந்த கட்சிக்கும் ஒதுக்கக்கூடாது. என் ராசிப்படி இன்று நல்ல நாள் அதனால் நான் வேட்புமனுவைத் தாக்கல் செய்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகவும் கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி கட்சியின் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் எந்தவித தொடர்பும் வைக்கக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

Summary

Of the eight Assembly constituencies in Thanjavur district, the Thanjavur constituency has been allotted to the BJP. However, a BJP candidate for the Thanjavur constituency has not yet been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.