தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தவெகவினர் புகாரளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 234 தொகுதிகளில் தனித்துக் களம் காண்கிறது.
தவெக வேட்பாளர்கள் பட்டியல் கடந்த மார்ச் 29 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சித் தலைவர் விஜய், திங்கள்கிழமை வியாசர்பாடி தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, பெரம்பூர், கொளத்தூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பெரம்பூரில் குவிந்த கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கண்டு வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவிருந்த பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு விஜய் பாதியிலேயே புறப்பட்டார்.
அப்போது பிரசாரம் மேற்கொள்ளும் பகுதிகளில் விஜய்யின் வாகனத்திற்கு போதிய காவல்துறை பாதுகாப்பு இல்லை என்றும் போக்குவரத்தைச் சரி செய்யாமல் இருப்பதால் பிரசாரம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தவெக இணைப் பொதுச் செயலர் நிர்மல் குமார், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு கடிதம் எழுதியிருந்தார்.முறையாக அனுமதி பெற்றும் பாதுகாப்பு இல்லை என்றும் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை காவல்துறையினர் உடனடியாக சரி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

தவெக கடிதம்.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகக் கூறி, தவெக இணைப் பொதுச் செயலர் நிர்மல் குமார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக தவெகவினர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். மேலும், அவர் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கட்சியின் தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த பிறகு, திட்டமிடப்படியே தேர்தல் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டார். தேர்தல் பிரசாரம் தேர்தல் அதிகாரிகளிடமிருந்து அனுமதிகளையும் ஒப்புதல்களையும் பெற்ற பின்னரே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ள ஒருவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Summary
Members of the Tamilaga Vettri Kazhagam have lodged a complaint with Union Home Minister Amit Shah, alleging security lapses regarding their leader, Vijay.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு வாய்ப்பளிக்க வேண்டும்: ஜம்மு - காஷ்மீர் முதல்வர் கோரிக்கை!
விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வாய் பாதுகாப்பு விலக்கப்பட்டது ஏன்?

சென்னையில் விஜய் பிரசாரத்துக்கு பலத்த பாதுகாப்பு!
விஜய் பாதுகாப்பு! பதவியில் இல்லாத மத்திய செயலருக்கு கடிதம் எழுதிய தவெக!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

