கேரளத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க திருமணம் முடிந்த ஒரு மணிநேரத்தில் மணமக்கள் இருவர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
அஸ்ஸாம், கேரளம் ஆகிய இரண்டு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (ஏப்.9) காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
பொதுமக்கள் தேர்தலில் வாக்களிக்க வசதியாக இன்று பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு ஊர்களில் இருந்தும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும், கேரளத்தில் 140 தொகுதிகளிலும், அஸ்ஸாமில் 126 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகின்றன.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி, கேரளத்தில் 62.71 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை வாக்குப் பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் அனைவரும் தங்களது வாக்குகளைப் பதிவுசெய்தனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள வாழமுட்டம் வாக்குச்சாவடியில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கைச் செலுத்துவதற்காக, புதுமணத் தம்பதியரான திவ்யஸ்ரீ மற்றும் அஷ்வந்த் லம்போதரன் ஆகியோர் காலை 9 மணிக்கு திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் இருவரும் வந்து வாக்களித்தனர்.
இவர்களைப் போலவே, வயநாடு மாவட்டத்தில் மேப்பாடியில் அகிலா - ஆண்டணி என்ற மணமக்களுக்கும் தங்களின் திருமணத்துக்கு முன்னதாகவே, தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். தேர்தலில் வாக்களிக்க வேண்டியது அனைவரின் கடமை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க... புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
Summary
Joining them in the spirit of the day, another bride from northern Wayanad district also made sure to vote first before heading off to her own wedding ceremony
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!

தூத்துக்குடியில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள்

தேர்தல் நாள்.. வாக்களித்த தலைவர்கள்!

கேரள சட்டப்பேரவைத் தேர்தல்; வாக்களித்த நடிகர் ஃபகத் ஃபாசில்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
