கேரள பேரவைத் தேர்தலில் களம் காணும் பெண் வேட்பாளர் ஒருவர் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.84 மட்டும் என தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
கேரளம் உள்பட தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய இடங்களில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிலும் கேரளத்தில் வரும் ஏப்.9 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு செய்ய இந்தியத் தேர்தல் ஆணையத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மார்ச் 23 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில், கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தையும் வாக்கு சேகரிப்பையும் தொடங்கியுள்ளன. இடதுசாரி ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி, தேசிய ஜனநாயக கூட்டணி போன்ற கூட்டணிக் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றன.
கேரள பேரவைத் தேர்தலில் ஏட்டுமானூர் தொகுதியில் இந்திய சோஷலிச ஐக்கிய மையத்தின் (கம்யூனிஸ்ட்) (எஸ்.யூ.சி.ஐ.) சார்பில் வேட்பாளராகக் களமிறங்கும் ஆஷ்னா தம்பி (26) சொத்து மதிப்பாக ரூ. 84 என பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதழியல் பட்டதாரியான இவர் கையில் ரூ.44 ரொக்கமாகவும், வங்கிக்கணக்கில் ரூ.40 வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், நிலம், தங்கம், வெள்ளி போன்ற எந்தவித அசையும், அசையா சொத்துக்களும் தன்னிடம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தலுக்கான செலவுகளை மக்களிடமிருந்து நிதியாகப் பெற்று, அதனை வைத்து மக்களுக்குப் பணியாற்றுவதாக கூறியுள்ளார்.
Summary
A female candidate contesting the elections in Kerala has declared in her election affidavit that her total assets amount to just ₹84.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!

சொந்தமாக விவசாய நிலம் இல்லை: இபிஎஸ் சொத்து மதிப்பு!

கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கலுக்கு இன்று கடைசி! சூடுபிடிக்கும் பிரசாரக் களம்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


