நீட் மறுதேர்வு எழுதும் மூன்று மாணவர்களில் ஒருவர் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தேசிய தேர்வு முகமையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
நீட் தேர்வுக்கு 22.7 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கும் நிலையில், மே 3ஆம் தேதி நடந்த தேர்வு வினாத்தாள் கசிவு புகார் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெறவிருக்கிறது.
மொத்தமுள்ள 22 லட்சம் பேரில், உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 3.56 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இது 15.7 சதவிகிதமாகும். நாட்டிலேயே அதிக மாணவர்கள் நீட் தேர்வெழுதுவது உத்தரப்பிரதேசத்தில்தான். அடுத்து மகாராஷ்டிரம். 2.22 லட்சம் பேர் (9.8%). ராஜஸ்தானில் 2.03 லட்சம் பேர் இது 8.9 சதவிகிதமாகும். ஆக ஒட்டுமொத்தமாக இந்த 3 மாநிலங்களில் இருந்து மட்டும், மொத்த எண்ணிக்கையில் சரியாக 35 சதவிகிதம் பேர் நீட் தேர்வை எழுதுகிறார்கள்.
தமிழகம் 1.42 லட்சம் பேருடன் 6வது இடத்தில் உள்ளது. முன்னதாக, பிகார் (1.56 லட்சம்), கர்நாடகம் (1.45 லட்சம்) என நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன. இந்த ஆறு மாநிலங்களில் இருந்து மட்டும் 55 சதவிகித மாணவர்கள் தேர்வெழுதுகிறார்கள்.
அடுத்தடுத்த இடங்களில் மத்தியப் பிரதேசம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளன.
மறுதேர்வு
வினாத்தாள் கசிவு காரணமாக நீட் மறு-தேர்வு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வினாத்தாள்களை ஹெலிகாப்டரில் அனுப்புவது, வினாத்தாள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் வெளி உலக தொடர்பின்றி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது போன்றவற்றை தேசிய தேர்வு முகமை மேற்கொண்டுள்ளது.
மறுபக்கம், நீட் தேர்வுக் கட்டணத்தை மாணவர்களுக்கு திருப்பிக் கொடுத்ததுடன் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நேரம் கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Shocking data has revealed that 35 percent of those taking the NEET exam hail from just three states.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி

நீட் மறுதேர்வு: எத்தனை லட்சம் தேர்வர்கள் தேர்வெழுதுகின்றனர்?

நீட் மறுதேர்வு வினாத்தாள் கடினமாக இருக்குமா? எல்லாம் ஊகங்கள்தான்!

நீட் மறுதேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்! என்டிஏ விளக்கம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
