சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த கல்வியாண்டில் மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதிதாகத் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு அமைப்புகள் மூலம் புதிய கல்லூரிகள் திறக்க அனுமதி கோரி சென்னை பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாகவும், 2026 - 27ஆம் ஆண்டு முதல் புதிய கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பல கல்வி அறக்கட்டளைகள், புதிய கல்லூரிகளைத் திறக்க விண்ணப்பித்திருப்பதாகவும், ராயப்பேட்டை, ஆலந்தூர், வியாசார்பாடி, வேதாச்சலம் நகர், மண்ணிவாக்கம், மதுராந்தகம், பட்டாபிராம், திருமுல்லைவாயல், திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய கல்லூரிகள் தொடங்க விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது, ஏற்கனவே, பொறியியல் கல்லூரிகளை நடத்தி வரும் கல்வி அறக்கட்டளைகள், தற்போது கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளின் மீது மாணவர்கள் கவனம் திரும்புவதால், புதிதாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் திறக்க ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
புதிய கல்லூரிகளைத் திறக்க அரசு உத்தரவிட்டதும், பல்கலைக்கழகம் தரப்பில் அனுமதி வழங்கப்படும். முதலாம் ஆண்டில் குறைந்தது 5 பாடப்பிரிவுகளின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற்று கல்லூரிகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
Summary
In good news for students, new arts and science colleges are set to be opened in Chennai.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சோ்க்கை: இன்று முதல் விண்ணப் பதிவு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

வெற்றி பெற்ற தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?

தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


