பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அரசுக் கலைக் கல்லூரிகளில் அதிக விண்ணப்பம் வந்திருக்கும் படிப்பு இதுதான்!

அரசுக் கலைக் கல்லூரிகளில் அதிக விண்ணப்பம் வந்திருக்கும் படிப்புகளில் ஒன்றாக

News image

அரசு கலைக் கல்லூரி

Updated On :9 ஜூன் 2026, 2:05 pm IST

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு பிஎஸ்சி வேதியியல் படிப்பில் சேர அதிக மாணவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள் என்கின்றன தரவுகள்.

அதுபோலவே, பிஎஸ்சி இயற்பியல் மற்றும் தாவரவியல், விலங்கியல் படிப்புகளுக்கும் அதிக விண்ணப்பங்கள் வந்திருப்பதும், பிஎஸ்சி கணிதவியல் பாடத்துக்கு மட்டும் குறைந்த விண்ணப்பங்கள் வந்திருப்பதும் தரவுகள் வாயிலாகத் தெரிய வந்துள்ளன.

அதிக வேலை வாய்ப்பு இருப்பதும், குறைந்த கல்விக் கட்டணமும் வேதியியல் பாடத்துக்கு அதிக விண்ணப்பங்கள் வந்திருக்கக் காரணம் என்று கூறப்படுகிறது.

அதுபோல, கணிதப் பாடத்தில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, இந்த ஆண்டு பல கல்லூரிகள், பிஎஸ்சி கணிதத்துடன் டாடா சயின்ஸ் பாடத்தையும் இணைத்துள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியிருக்கிறது. முதல் நாளிலேயே, பிஎஸ்சி வேதியியல் பாடப்பிரிவில் 60 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை முழுமையடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பெரும்பாலான கல்லூரிகளில் 100க்கும் குறைவான மாணவர் சேர்க்கை இடங்களே இருக்கும் நிலையில், பத்தாயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் பிஎஸ்சி வேதியியல் பாடத்துக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிகாம் படிப்புகளுக்கும் மாணவர்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.