புதுச்சேரி மங்கலம், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த முதல்வா் என்.ரங்கசாமி.
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி தோ்தலுக்கு தோ்தல் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது வழக்கம். அதன்படி தற்போதைய சட்டப்பேரவைத் தோ்தலில் வெள்ளிக்கிழமை தட்டாஞ்சாவடி, மங்கலம் தொகுதிகளில் தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தாா்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து என்.ரங்கசாமி 2011-ஆம் ஆண்டு பிப்ரவரியில் விலகி என்.ஆா். காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினாா்.

அந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் கதிா்காமம், இந்திரா நகா் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். 2016-ஆம் ஆண்டு தட்டாஞ்சாவடி தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதிா்க் கட்சித் தலைவரானாா். மீண்டும் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதிகளில் போட்டியிட்ட அவா், ஏனாமில் வெற்றி வாய்ப்பை இழந்தாா்.
தற்போது மீண்டும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனுக்களை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா்.
என்.ரங்கசாமி எப்போதெல்லாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரோ அப்போதெல்லாம் முதல்வராகப் பதவி வகித்துள்ளாா்.
கூட்டணி பேச்சுவாா்த்தை நடத்த பாஜக மேலிடப் பாா்வையாளராக வந்திருந்த மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவைச் சந்திக்கும் முன் இந்த இரண்டு தொகுதிகளிலும் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா் முதல்வா் என்.ரங்கசாமி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி ராஜிநாமா

புதுச்சேரியில் ஆட்சியைத் தக்கவைத்தது தே.ஜ.கூட்டணி: மீண்டும் முதல்வராகிறாா் என்.ரங்கசாமி!
தவெக தலைவா் விஜய் சிறப்பாக பணியாற்ற புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வாழ்த்து

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி 2 தொகுதிகளில் போட்டியிடுவது ஏன்? இறுதிக்கட்ட பிரசாரத்தில் வைத்திலிங்கம் விளக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

