விஜய் நடித்த படங்களிலேயே லவ் டுடே ரசிகர்களால் இன்றும் பாராட்டப்படுகிறது.
தமிழ்த் திரையுலகில் விஜய் நடித்த காதல் படங்கள் ரசிகர்களிடையே தனி வரவேற்பைப் பெற்றன. ஆக்சன், மாஸ் படங்களுக்கு மாறுவதற்கு முன்பு 90களில் இவர் நடித்த காதல் திரைப்படங்கள் விஜய்யை தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தன.
விஜய்யின் காதல் படங்கள் பார்ப்பதற்கு மிக எளிமையாகவும், நம் வாழ்வில் அல்லது நம் நண்பர்கள் வாழ்வில் நடப்பது போன்ற ஒரு யதார்த்த உணர்வையும் தந்தன.
அந்தத் தனித்துவமான காதலன் பிம்பம்தான், அவரைப் பிற்காலத்தில் ஒரு மாபெரும் திரை நட்சத்திரமாகவும் தளபதியாகவும் மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.
இன்றைய தலைமுறைக்கு விஜய் என்றால் அதிரடி சண்டை, பஞ்ச் வசனங்கள் மற்றும் மாஸ் என்ட்ரிதான் நினைவுக்கு வரும். ஆனால் 1990-களின் பிற்பகுதியிலும் 2000-களின் தொடக்கத்திலும் தமிழ் நெஞ்சங்களைத் தன் வசீகரிக்கும் புன்னகையாலும், யதார்த்தமான நடிப்பாலும் கட்டிப்போட்ட பெருமை விஜய்யின் காதல் படங்களுக்கு உண்டு. ஆரம்பகால திரையுலகப் பயணத்தில் தொடர் சறுக்கல்களைச் சந்தித்த விஜய்யை, குடும்பங்கள் கொண்டாடும் ஒரு நட்சத்திரமாக நிலைநிறுத்திய பெருமை முழுக்க முழுக்க அவரது காதல் கதைகளையே சாரும்.
வெறும் பொழுதுபோக்கு படங்களாக இல்லாமல், தமிழ் திரையுலகின் காதல் இலக்கணத்தையே மாற்றி அமைத்த பெருமை விஜய்யின் படங்களுக்கு உண்டு. காதலின் வலி, தியாகம், குடும்ப உறவுகளுக்குத் தரும் மரியாதை, நட்பின் முக்கியத்துவம் எனப் பல பரிமாணங்களை அவரது படங்கள் பேசின.
ஒருதலைக் காதலின் வலியைப் பேசிய 'பூவே உனக்காக', குடும்ப மாண்புகளோடு காதலைச் சொன்ன 'காதலுக்கு மரியாதை', விதியின் விளையாட்டிலும் பிரியாத காதலை உணர்த்திய 'துள்ளாத மனமும் துள்ளும்', தந்தையின் பாசத்தை எழுத்துரைத்த லல் டுடே இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்.
கலை உலகில் இன்று அவர் அடைந்துள்ள பிரம்மாண்டமான உயரத்திற்கு, ஆரம்பக் காலத்தில் அவர் விதைத்த இந்தக் காதல் பயிர்களே அச்சாணியாக விளங்கின என்றால் அது மிகையல்ல. குறிப்பாக, பெண் ரசிகர்களின் பேராதரவை விஜய்க்கு அள்ளிக் கொடுத்ததில் இந்தத் திரைப்படங்களுக்கு மிக முக்கியப் பங்குண்டு.
விஜய்க்கு திரைத் துறையில் முதன்முதலில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய பூவே உனக்காக படம்கூட ஒரு காதல் படம்தான். பிறகு அந்த ஃபார்முலாவை கெட்டியாகப் பிடித்து அடுத்தடுத்த காதல் படங்களில் நடித்து கோலிவுட்டில் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.
1996 இல் பூவே உனக்காக படம் மூலம் திரும்பிப் பார்க்க வைக்க விஜய் அதற்கு அடுத்த வருடத்திலும் காதலுக்கு மரியாதை, லவ் டுடே என தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தார். பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்று லவ் டுடேவும் காதல் படம்தான். பாலசேகரன் இயக்கியிருந்த இப்படத்திற்கு சிவா இசையமைத்திருந்தார்.
இப்படத்தின் அனைத்துப் பாடல்களும், குறிப்பாக என்ன அழகு எத்தனை அழகு, காதலின் வலியை உணர்த்தும் ஏன் பெண்ணென்று உள்ளிட்ட பாடல்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் பாடல்களாகும்.
லவ் டுடே கதை என்ன....?
கணேஷ் (விஜய்), சுவலட்சுமியைப் பார்த்ததும் காதலில் விழுகிறார். சுவலட்சுமியிடம் தன் காதலைச் சொல்ல அவர் பின்னாடியே சுற்றுகிறார். ஆனால், சுவலட்சுமி படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் பெண் என்பதால் கணேஷின் காதலைத் தொடர்ந்து நிராகரிக்கிறார். ஆனால், மருத்துவரான கணேஷின் தந்தை ரகுவரன் தன் மகனின் காதலுக்கு முழு ஆதரவு தருகிறார்.
மறுபுறம் கண்டிப்பான போலீஸ் அதிகாரியான சுவலட்சுமியின் தந்தையோ கணேஷின் காதலை அடியோடு எதிர்க்கிறார். கணேஷைப் பலமுறை எச்சரிப்பதுடன் சிறையிலும் அடைத்து சித்திரவதையும் செய்கிறார்.
மகனின் நிலையைப் பார்த்து வேதனைப்படும் தந்தை ரகுவரன், ஒரு விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார். தந்தையின் மரணம் கணேஷை நிலைகுலைய வைக்கிறது. தன் காதலுக்காக உயிரைவிட்ட தந்தையின் பாசத்தை ஒருகட்டத்தில் உணரும் கணேஷ், கிளைமாக்ஸில் அதிர்ச்சி தரும் முடிவை எடுக்கிறார். அதே நேரத்தில் கணேஷின் நிலை அறிந்து அவனின் காதலை ஏற்க சுவலட்சுமி முன்வருகிறார். ஆனால், கணேஷ் சுவலட்சுமியின் காதலை ஏற்க மறுக்கிறார்.
காதலால் என் தந்தையை இழந்துவிட்டேன், இனி எனக்குக் காதல் வேண்டாம். என் தந்தையின் கனவுப்படி என் வாழ்க்கையில் முன்னேறுவதே லட்சியம் என்று கூறிவிட்டுப் புறப்படுகிறார். 90களில் வந்த பெரும்பாலான காதல் திரைப்படங்கள் காதலர்கள் ஒன்று சேர்வது போலவோ அல்லது தற்கொலை செய்து கொள்வது போலவோதான் முடியும்.
ஆனால், லவ் டுடே திரைப்படத்தில் நாயகன் யாரும் எதிர்பார்க்காத முடிவாக காதலைத் தியாகம் செய்து, வாழ்க்கையில் முன்னேறும் பாதையில் பயணிப்பதுபோல கதை அமைக்கப்பட்டிருந்ததால் இன்றும் ரசிகர்களின் மனதில் இப்படம் நீங்கா இடம் பிடித்துள்ளது.
லவ் டுடே... இன்று மட்டுமல்ல விஜய்யின் கொண்டாடப்படும் காதல் படங்களில் என்றுமே முதலிடம்தான்.
Summary
"Then, now, and forever, Vijay's romantic epic movie is Love Today."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கனவுக் கன்னி தேடல்... முக்கோண காதல் கதையில் வென்ற விஜய்!
திரையில் விஜய்யின் அரசியல் - இயல்பானதா? திட்டமிடப்பட்டதா?

துள்ளாத மனமும் துள்ளும்! விஜய் - சிம்ரன் ஜோடியின் வெற்றிப் படங்கள்!

லவ் ஓ லவ் திரைப்படத்தின் டீசர்!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை


