ஜனவரியில் தொடங்கும் ஆதி ருத்ரா படப்பிடிப்பு

ஐந்து மொழிகளில் உருவாகும் ஆதி ருத்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Published On :26 அக்டோபர் 2026, 11:48 am IST

காந்தாரா திரைப்படத்திற்குப் பிறகு ஆன்மிகம் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது ‘ஆதி ருத்ரா’ திரைப்படம். ஆதி சாய்குமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை திரிசூல் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

‘காந்தாரா’, ‘விருபாக்ஷா’, ‘மங்களவாரம்’, தமிழில் வெளியான ‘மகாராஜா’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். A.J. ஷெட்டி ஒளிப்பதிவுப் பணிகளைக் கவனிக்கிறார்.கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகவுள்ளது.

தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் கூடுதல் தகவல்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.