கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

40 ஆண்டுகளில் முதல்முறை... ரசிகர்களுடன் இணைந்து ஜெயிலர் 2 படம் பார்த்த ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் 40 ஆண்டுகளில் முதல்முறையாக ரசிகர்களுடன் இணைந்து தனது திரைப்படத்தைப் பார்த்தது குறித்து...

Rajinikanth watches Jailer 2 with fans

ரசிகர்களுடன் இணைந்து ஜெயிலர் 2 படம் பார்த்த ரஜினி - படங்கள்: எக்ஸ் / சன் பிக்சர்ஸ்

Published On :24 அக்டோபர் 2026, 3:03 pm IST

நடிகர் ரஜினிகாந்த் 40 ஆண்டுகளில் முதல்முறையாக ரசிகர்களுடன் இணைந்து தனது திரைப்படத்தைப் (ஜெயிலர் 2) பார்த்தது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஜெயிலர் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த அக்.15ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, நமோ நாராயணன், வித்யா பாலன், மிர்ணா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படம் இதுவரை ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் ஒரு விடியோ வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் ரஜினி ரசிகர்களுடன் இணைந்து ஐமேக்ஸ் திரையில் படம் பார்க்கிறார்.

ஜெயிலர் 2 படக்குழு படத்தின் வெற்றியைக் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். இதில் பங்கேற்ற ரஜினி பின்னர் ஐமேக்ஸ் திரையில் பேரன்களுடன் இணைந்து படம் பார்த்தார்.

கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக ரஜினி இதுபோல ரசிகர்களுடன் இணைந்து படம் பார்க்கிறார் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தில் மோகன்லால் காட்சிகள் குறைக்கப்பட்டதாகவும், சந்தானம் காட்சிகள் முழுமையாக நீக்கப்பட்டதாகவும் சமூக வலைதளத்தில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.

Summary

Rajinikanth attends Jailer 2 show with fans, a first in 40 years

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.