தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆலியா பட், தீபிகா படுகோன் படங்கள் மட்டுமே வசூலிக்கின்றன: ராதிகா ஆப்தே

பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே நடிகைகளுக்கான வணிகம் குறித்து பேட்டியில் கூறியிருப்பதாவது...

Alia Bhatt, Radhika Apte, Deepika Padukone

ஆலியா பட், ராதிகா ஆப்தே, தீபிகா படுகோன் - படங்கள்: இன்ஸ்டா / ஆலியா பட், ராதிகா ஆப்தே, தீபிகா படுகோன்

Published On :24 அக்டோபர் 2026, 5:45 pm IST

பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே பிடிஐக்கு அளித்த பேட்டியில், “ திரையரங்குகளில் நடிகைகள் ஆலியா பட் மற்றும் தீபிகா படுகோனுக்கு மட்டுமே வரவேற்பு இருக்கின்றன” எனக் கூறியுள்ளார்.

வேலூரில் பிறந்த நடிகை ராதிகா ஆப்தே தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் அறிமுகமானார். பின்னர், கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது, பெரும்பாலும் ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

வித்தியாசமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை ராதிகா ஆப்தே பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகள் வென்றுள்ளார். கடைசியாக லஸ்ட் ஸ்டோரிஸ் 3 இணையத் தொடரில் நடித்திருந்தார்.

தற்போது அக்கா என்ற இணையத்தொடரில் நடித்துள்ளார். இதில் இவருடன் நடிகை கீர்த்தி சுரேஷும் நாயகியாக நடித்துள்ளார். யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இத்தொடரை அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கிறார்.

இந்தத் தொடர் வரும் அக்.30ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு பிடிஐக்கு அளித்த பேட்டியில் நடிகை ராதிகா ஆப்தே பேசியிருப்பதாவது:

நான் நடிக்கும் படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறதா அல்லது ஓடிடியில் வெளியாகிறதா என்பதைப் பார்த்து தேர்வு செய்வதில்லை. அதைக் குறித்து நான் கவலைப்படுவதும் இல்லை. அதில் பல்வேறு வணிகங்கள் இருக்கின்றன.

ஏதோ ஒரு வழியில் படம் வெளியானால் போதுமென்று நான் நடிப்பேன். திரையரங்குகளில் வெற்றியடையும் படங்கள் எதுவென்று கணிக்க முடியவில்லை. நல்ல படங்களாக இருந்தாலும் நான் நாயகி நடித்தவை வசூலிக்காமல் போயிருக்கின்றன.

நான் பொதுவாக ஆலியா பட்டோ அல்லது தீபிகா படுகோனோ கிடையாது. அவர்களுக்காவது திரையரங்குகளில் ஓபனிங் கிடைக்கிறதே என்பதுதான் ஆறுதலாக இருக்கிறது. நான் உங்களுடன் நேர்மையாக இருக்க விரும்புகிறேன். அதாவது ஆண்கள் மட்டுமே முக்கியமானதாக இருக்கிறார்கள்.

தற்போதைக்கு வன்முறை படங்கள் மட்டுமே வசூலித்து வருகின்றன. அதற்கு நான் முழுமையான எதிர் கருத்தை வைத்திருக்கிறேன். அதனால், இது சற்று இக்கட்டான சூழ்நிலை. அந்த மாதிரியான படங்களை நான் பார்ப்பதில்லை; அவை எல்லாம் அபத்தமாக இருப்பதாக நினைக்கிறேன்.

பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டு எப்படி 50 ஆண்கள் அல்லது 50 பெண்கள் அடிவாங்குவதை பார்க்க முடிகிறது? படைப்பாற்றலுடன் அடி வாங்குகிறார்களா? கடந்த முறை பாத்திரம் கழுவும் தொட்டியில் உடைந்த மண்டை அடுத்த முறை கான்கிரீட் தளத்தில் உடையும். அதனால், அதில் நடிக்க விரும்பவில்லை என்றார்.

Summary

Only Alia Bhatt, Deepika Padukone can get theatrical opening: Radhika Apte

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.