தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டோரதி! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (அக். 23 - 29)

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

this week ott

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! - சித்திரிப்பு / விஜய்

Published On :22 அக்டோபர் 2026, 7:53 pm IST

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைப் பார்ப்போம்.

1டோரதி

Listicle image

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான டோரதி திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை (அக். 23) வெளியாகிறது.

2தி பாரடைஸ்

Listicle image

நானியின் தி பாரடைஸ் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியிருக்கின்றது.

எஸ்எல்வி சினிமாஸ் தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.

3தூமகேது

Listicle image

ஹேப்பி ஹவர்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் உருவான தூமகேது படத்தை சுதி மாடிசன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சஜின் கோபு நாயகனாவும் நிகிலா விமல் நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.

இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

4சட்டமும் நீதியும் - 2

Listicle image

சட்டமும் நீதியும் - 2 இணையத் தொடரின் இரண்டாம் பாகம் நாளை ஜீ5 தளத்தில் வெளியாகிறது.

முதல் பாகத்தை எடுத்த பாலாஜி செல்வராஜ் இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் வழக்குரைஞராக நடித்த நடிகர் சரவணன், இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். இதில், மற்றொரு முக்கிய பாத்திரத்தில் வழக்குரைஞராக நடிகை வரலட்சுமி நடிக்கிறார்.

5 நா வைஃப் மிஸ்ஸிங்

Listicle image

ஸ்வாதி பிரகாஷ் மந்திரிபிரகதா இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள நா வைஃப் மிஸ்ஸிங் இணையத் தொடர், ஆஹா தளத்தில் காணக் கிடைக்கிறது.

இந்தத் தொடரில் வருண் சந்தேஷ், ஸ்வேதா பாசு பிரசாத், பிரவீன், சத்ய ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

6வரம்

Listicle image

ஆதித்ய மண்டலா இயக்கத்தில் வெளியான தெலுங்கு மொழி இணையத் தொடர் ’வரம்’. இதில் விஸ்வதேவ் ரசகொண்டா, ஷிவாத்மிகா ராஜசேகர், ஸ்ரீனிவாச அவசரலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம்.

7கடந்த வார ஓடிடி (என்ன விலை)

Listicle image

dinamani

நடிகர் கருணாஸ், நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான என்ன விலை படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது

மலையாளத்தில் தேசிய விருது பெற்ற தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும் என்ற படத்துக்கு கதை எழுதிய சஜீவ் பழூர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

8ஆஷா

Listicle image

நடிகை ஊர்வசி, நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான ஆஷா படம் ஜீ5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

அஜித் விநாயக ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சஃபர் சனல் இயக்கத்தில் உருவான இந்தப் படம் விமர்சன ரீதியாக மிகுந்த வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ஊர்வசியின் நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.

9கப்பி ஸ்குவாட்

Listicle image

பெல்ராஜ் கலாரிக்கல் இயக்கத்தில் ரினோஷ் ஜார்ஜ், ஸ்ரீஜித் கங்காதரன், ராகுல் ரிஜி நாயர், ஸ்ரீஜித் பாபு, அர்ஜுன் ரஞ்சன் மற்றும் தியா தீபன் ஆகியோர் நடித்து வெளியான தொடர் காப்பி ஸ்குவாட்.

இந்தத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது.

10இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்

Listicle image

ஷ்யாமின் கிரீஷ் இயக்கத்தில் சங்கீத் பிரதாப், ஷராஃபுதீன், அகிலா பார்கவன் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்.

இந்தத் திரைப்படத்தை மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

Summary

this week ott release movies dorathy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.