தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் வெளியான அக்கா இணையத் தொடரின் டீசர்!

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான ‘அக்கா’ இணையத் தொடரின் டீசர் குறித்து...

Keerthy Suresh in the web series ‘Akka’

‘அக்கா’ இணையத் தொடரில் கீர்த்தி சுரேஷ் - படங்கள்: நெட்பிளிக்ஸ்

Published On :17 அக்டோபர் 2026, 2:31 pm IST

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளை முன்னிட்டு ‘அக்கா’ என்ற இணையத் தொடரின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தத் தொடர் நெட்பிளிக்ஸில் அக்.30ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தத் தொடரில் கீர்த்தி சுரேஷ் பவானியாகவும், ராதிகா ஆப்தே ருத்ராவாகவும் அறிமுகமாகின்றனர்.

பெர்னூரு பாரம்பரியமும் அதைவிட அதிகமாக பகையும் கொண்ட இடம். இங்கு ஆட்சி செய்யும் பெண்கள் யாருக்கும் அடிபணிவதில்லை. மாறிவரும் அதிகாரப் போட்டிகள் மற்றும் கொழுந்துவிட்டெரியும் பகைமைகளால் உருவான பெர்னூரு ராஜ்ஜியத்தின் மையமே இந்த இரண்டு பெண்கள்தான்.

பெண்களை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதையான இத்தொடரை எழுதி, இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தர்மராஜ் ஷெட்டி. 1980-களின் பின்னணியில் தலைமுறை தலைமுறையாகப் பெண்களால் கட்டமைக்கப்பட்டு, ஆளப்பட்டு, பாதுகாக்கப்பட்ட பெர்னூரு என்ற கற்பனை உலகத்தை உருவாக்கியுள்ளார்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு ‘அக்கா’ இணையத் தொடரின் டீசர் வெளியானது மற்றும் தொடரின் அனுபவம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பதாவது:

என்னுடைய பிறந்த நாளன்று ‘அக்கா’ டீசர் வெளியிட்டிருப்பது மிகவும் சிறப்பானது. இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே மறக்க முடியாதது பவானிதான். ராதிகா ஆப்ஃதேவுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுடைய கதாபாத்திரங்கள் கதைக்கு சுவாரஸ்யமான பல பரிமாணங்களை தரும்.

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களுடன் இணைந்து நான் பணியாற்றும் முதல் தொடர் இது. இந்தக் கதையின் தனித்துவமும், அதன் உலகமும்தான் என்னை ஈர்த்தது. நிச்சயம் பார்வையாளர்களுக்கும் இது பிடிக்கும் என நம்புகிறேன் என்றார்.

Summary

Teaser for the web series 'Akka' released on Keerthy Suresh's birthday!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.