பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பின்புலம் இல்லாமல் வெற்றிச் சிகரங்களைத் தொட்டவர் தேவா: ஹிப்ஹாப் ஆதி

இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு நடிகரும் இயக்குநருமான ஹிப்ஹாப் ஆதி கூறியிருப்பதாவது...

Hiphop Adhi with music composer Deva

இசையமைப்பாளர் தேவா உடன் ஹிப்ஹாப் ஆதி - படம்: எக்ஸ் / ஹிப்ஹாப் தமிழா

Published On :17 அக்டோபர் 2026, 3:03 pm IST

இசையமைப்பாளர் தேவா இறப்பு குறித்து நடிகர், இயக்குநர், இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி, “எந்தப் பின்புலமும் இல்லாமல் கலைத் துறையில் வெற்றிச் சிகரங்களைத் தொட்டவர்” என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா (75 வயது) இன்று சென்னையில் தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார்.

மறைந்த இசையமைப்பாளர் தேவா இசையுலகிற்கு ஆற்றிய சேவையை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியான மீசைய முறுக்கு 2 படத்தில் கானா பாடல்கள் குறித்தும் அதன் எழுச்சி குறித்தும் ஹிப்ஹாப் ஆதி பேசியிருப்பார். இந்த நிலையில், தேவா மறைவுக்கு அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கடும் அதிர்ச்சி அளிக்கிறது.

‘மீசைய முறுக்கு-2’ படத்தின் உருவாக்கத்தின் போதும், வெளியீட்டின் போதும் அவரோடு உரையாடிய அனுபவங்கள் என்றும் மறக்க முடியாதவை. சமீப காலத்தில் அவரோடு நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

எந்தவித பின்புலமும் இல்லாமல் கலைத் துறையில் நுழைந்து மிகப்பெரிய வெற்றிச் சிகரங்களைத் தொட்டு ஏராளமானோருக்கு முன்மாதிரியாக திகழ்ந்த ஒருவரை தமிழ்ச் சமூகம் இழந்துள்ளது.

எளிய மக்களின் இசையை திரையில் கொண்டுச் சேர்த்த மாபெரும் கலைஞரான தேவா என்றென்றும் நினைவுக் கூறப்படுவார். தேவா அப்பாவின் குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும், ரசிகர்களில் ஒருவனாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Summary

Deva reached the pinnacle of success without any backing: Hiphop Tamizha

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.