பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

1000 நாள்களை நிறைவு செய்து சாதனை! இதயம் தொடருக்கு குவியும் வாழ்த்து!

பல்லவி கெளடா நடிக்கும் இதயம் தொடர் ஆயிரம் நாள்களை நிறைவு செய்துள்ளது குறித்து...

News image

இதயம் தொடரிலிருந்து... - இன்ஸ்டாகிராம்

Updated On :19 மே 2026, 3:57 pm IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இதயம் தொடர் ஆயிரம் நாள்களை நிறைவு செய்துள்ளது. முதல் பாதியில் நடிகை ஜனனி அசோக் குமார் நாயகியாக நடித்த நிலையில், தற்போது பல்லவி கெளடா நாயகியாக நடித்து வருகிறார்.

ஆயிரம் நாள்களைக் கடந்த தொடரில் நடித்து வருவதை ரசிகர்களுடன் மிகவும் நெகிழ்ச்சியாக நடிகை பல்லவி கெளடா பகிர்ந்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு இதயம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நடிகை பல்லவி கெளடா நாயகியாகவும், ரிச்சட் கோஷ் நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.

திருமணத்திற்கு பிறகான காதல், மகளின் மீதான பெற்றோரின் பாசம், குடும்ப சிக்கல் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு வரும் இத்தொடர், மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Story image

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில், அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெறும் தொடராக இதயம் உள்ளது.

ஆகஸ்ட் 2023 முதல் ஒளிபரப்பாகிவரும் இதயம் தொடரில் இருந்து 650 எபிஸோடுகள் இருக்கும்போது ஜனனி அசோக் குமார் விலகி, அவருக்கு பதிலாக பல்லவி கெளடா நடித்து வருகிறார்.

இதயம் தொடரில் நடித்ததற்காக விருது வென்ற பல்லவி, ரிச்சட்

இதயம் தொடரில் நடித்ததற்காக விருது வென்ற பல்லவி, ரிச்சட் - இன்ஸ்டாகிராம்

தெலுங்கு தொடர்களில் நடித்துள்ளதால், அந்த அனுபவத்தின் மூலம் இத்தொடரில் ஜனனி அசோக் குமாரின் இடத்தை பல்லவி கெளடா நிரப்பியுள்ளார் என்றே ரசிகர்கள் கருதுகின்றனர்.

இதயம் தொடர்

இதயம் தொடர் - இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் இதயம் தொடர் 1000 நாள்களைக் கடந்துள்ளது. இதனை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு உடன் நடிக்கும் நடிகர் ரிச்சட் கோஷுக்கு பல்லவி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது:

''1000 நாள்கள். இது தொலைக்காட்சியில் மிகப்பெரிய சாதனை. ஒவ்வொரு சிறந்த கதையும் ஒவ்வொரு எபிஸோடுகளாக செதுக்கப்படுகிறது. ஆயிரம் எபிஸோடுகள் என்ற மைல்கல்லை எட்டியதற்கு மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளேன். ரிச்சர்ட் கோஷுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவரால் முடிந்த இடத்தில் எல்லாம் எனக்கு உதவியிருக்கிறார். எனக்காக என்றுமே துணையாக இருக்கும் எண்ணத்தை கொடுத்ததற்காக நன்றி. என்னவொரு அழகான பயணம் இது'' என பல்லவி பதிவிட்டுள்ளார்.

சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் இதயம் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

Zee tamil Idhayam serial completes 1000 episodes pallavi gowda richard gosh post viral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.