பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

நியூயார்க் இந்தியத் திரைப்பட விழாவில் அசாமிய படமான ஆகுதி திரையிடல்!

நியூயார்க் இந்தியத் திரைப்பட விழாவில் ஆகுதி எனும் அசாமியத் திரைப்படம் திரையிடப்படுகிறது...

News image

அசாமியப் படமான “ஆகுதி” போஸ்டர்... - Instagram

Updated On :17 மே 2026, 1:16 pm IST

நியூயார்க் இந்தியத் திரைப்பட விழாவில் திரையிடப்பட “ஆகுதி” எனும் அசாமியத் திரைப்படம் தேர்வாகியுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான நியூயார்க் இந்தியத் திரைப்பட விழாவில், அறிமுக இயக்குநர் ஸ்நிக்தா பி. ராய் இயக்கிய “ஆகுதி” எனும் அசாமிய மொழி திரைப்படம் வரும் மே 30 ஆம் தேதி வேர்ல்ட் பிரிமீயர் பிரிவின் கீழ் திரையிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்நிக்தா பி. ராய் எழுதி, இயக்கி, படத்தொகுப்பு செய்துள்ள இந்தப் படம் குழந்தைப் பருவத்தில் தாயை இழந்து அந்த ஏக்கத்தில் வாழும் 8 வயது சிறுமிக்கும், அவளின் தந்தைக்கும் இடையிலான உறவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில், லக்கி எனும் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் கவிஷா மஹாந்தா நடித்துள்ளார். மேலும், நீலீம் சேட்டியா, அனிஷா ஹசாரிகா, அருண் ஹசாரிகா மற்றும் அனன்யா ஹசாரிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி மிகவும் குறைவான திரைப்படங்களே உருவாக்கப்படுகின்றன. இந்த நிலையில், இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் அசாமிய மொழி படங்கள் தேர்வு செய்யப்படுவது அம்மாநில திரைத்துறைக்கு மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

முன்னதாக, 2001 ஆம் ஆண்டு செப். 11 அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, சர்வதேச சமூகத்துக்கு இந்திய கலாசாரம் குறித்த புரிதலை உருவாக்கும் நோக்கில் இந்த திரைப்பட விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

The Assamese film titled "Aakuti" has been selected to be screened at the New York Indian Film Festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.