பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கேன்ஸ் திரைப்பட விழாவில் புறக்கணிப்பு? விமர்சனங்களுக்கு ஆலியா பட் பதிலடி!

நடிகை ஆலியா பட் தனக்கு வந்த கேலிக்குப் பதிலளித்துள்ளது குறித்து...

News image

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆலியா பட். - படங்கள்: இன்ஸ்டா / ஆலியா பட்.

Updated On :15 மே 2026, 2:34 pm IST

பாலிவுட் நடிகை ஆலியா பட் (33 வயது) கேன்ஸ் திரைப்பட விழாவில் லோரல் நிறுவனத்தின் விளம்பர தூதராகப் பங்கேற்றார். இந்த நிகழ்வில் புகைப்பட கலைஞர்கள் அவரைப் புகைப்படம் எடுக்காமல் புறக்கணித்தது குறித்து இன்ஸ்டாவில் கமெண்ட் செய்தவருக்கு ஆலியா பட் பதில் அளித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் கடந்த ஆலியா பட் மே.12, 13ஆம் தேதிகள் கலந்துகொண்டார். இந்த விழா மே 12 முதல் மே 23ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. கடந்தாண்டும் ஆலியா பட் இந்த விழாவில் பங்கேற்றிருந்தார்.

கேன்ஸ் விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பில் ஆலியா பட் நடந்துவரும்போது புகைப்பட கலைஞர்கள் அவரைப் படம் எடுக்க பெரிதாக ஆர்வம் காட்டாத விடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பேசுபொருளாகின.

இணையத்தில் சிலர் நடிகைக்கு ஆதரவாகவும் சிலர் கேலியாகவும் இதுகுறித்து பேசத் தொடங்கினர். இந்த நிலையில், ஆலியா பட் தான் கேன்ஸ் விழாவில் பங்கேற்ற புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்தப் பதிவில் இணையவாசி ஒருவர், “என்ன ஒரு அவமானம், யாருமே உங்களைக் கண்டுகொள்ளவில்லை” எனக் கமெண்ட் செய்திருந்தார். இந்தக் கருத்துக்கு ஆலியா பட், “ஏன் அவமானம் அன்பே? நீ என்னைக் கண்டுகொண்டுள்ளாயே!” என மறுமொழி அளித்திருந்தார்.

ஆலியா பட்டின் இந்தக் கமெண்ட் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. விமர்சனங்களுக்கு சரியான பதிலடி எனவும் சிலர் இதெல்லாம் சமாளிப்பு எனவும் கூறிவருகிறார்கள்.

Summary

Alia Bhatt reacts to troll over her Cannes Film Festival video

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.