பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

விவாகரத்தை அறிவித்தார் மௌனி ராய்!

மௌனி ராய் பகிர்ந்த விவாகரத்து அறிவிப்பு...

News image

மௌனி ராய் தன் கணவர் சுராஜ் உடன்

Updated On :8 மணி நேரங்கள் முன்பு

நடிகை மௌனி ராய் விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகையான மௌனி ராய் கவர்ச்சியான புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிடுவதால் எப்போதும் ரசிகர்களின் கவனத்திலேயே இருக்கிறார்.

கடந்த சில நாள்களுக்கு முன் மௌனி ராயும் அவரது கணவர் சுரஜ் நம்பியார் இருவரும் ஒருவரை ஒருவர் இன்ஸ்டாகிராமில் நட்பு நீக்கம் செய்ததுடன் திருமண புகைப்படங்களையும் நீக்கினர். இதனால், இருவரும் விவாகரத்து செய்யத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவின.

ஆனால், மௌனி ராய், “அனைத்து செய்தி நிறுவனங்களுக்கும் ஒரு வேண்டுகோள். தவறான கதைகளைப் பரப்பாதீர்கள். தயவுசெய்து, எங்களுக்கான தனியுரிமையை (பிரைவசி) வழங்குங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மௌனி ராய் இன்ஸ்டாவில், "நாங்கள் இருவரும் அவரவர் பாதையில் பயணிக்கலாம் என முடிவு செய்துள்ளோம். எங்கள் தனிப்பட்ட வாழ்வு குறித்து நிறைய போலிச் செய்திகள் பகிரப்பட்டு வைரலாகின. ஆனால், அவை எதுவும் எங்கள் உறவின் உண்மையைப் பிரதிபலிக்கவில்லை. எங்களின் தனியுரிமையை மதித்தவர்களுக்கு நன்றி“ என விவாகரத்தை அறிவித்துள்ளார்.

Actress Mouni Roy has announced that she is going to get a divorce.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.