மக்கள் மத்தியில் பிரபலமடைந்த ’விலங்கு’ தொடர் குழுவின் புதிய இணையத் தொடரின் முதல் பார்வை புரோமோ விடியோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் நடிகர்கள் பிரசாந்த் பாண்டியராஜ், பாலாஜி சக்திவேல் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் ’வாரண்ட்’ என்ற புதிய இணையத் தொடரில் நடித்துள்ளார்கள்.
இந்தத் தொடரில் கௌசல்யா, அருள் ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
ஏ. ஆர். அசோக்குமார் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள இந்தத் தொடரை, சிவன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் தயாரித்துள்ளார். கதை திரைக்கதையையும் எழுதியுள்ளார்.
குற்ற புலனாய்வு விசாரணை பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த இணையத் தொடர், ஜீ 5 ஓடிடி தளத்தில் மே 22 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
’விலங்கு’ இணையத் தொடர் குழு, மீண்டும் ’வாரண்ட்’ என்ற புதிய இணையத் தொடரை எடுத்துள்ளதால், இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், “அணிக்கு வாழ்த்துகள். இந்தத் தொடரின் முதல் பார்வை விடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். விலங்கு, மாமன் மாதிரியான படத்தைக் கொடுத்த நண்பர் பிரசாந்த் பாண்டியராஜ் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். வெற்றியடைய படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்றார்.
Summary
A Director Debuts as a Lead Actor! WARRANT First Look Promo video
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரத்ன குமாரின் 29 படத்தின் புரோமோ விடியோ!

’விலங்கு’ குழுவின் புதிய இணையத் தொடர் அறிவிப்பு!
அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் அறிமுக விடியோ!
கர மேக்கிங் விடியோ!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

