திமுக தோல்வி பற்றி நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை மே 4 காலை 8 மணிக்குத் தொடங்கி நள்ளிரவையும் கடந்து நீடித்தது.
234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்து அதிகாரபூர்வமாக முடிவுகள் வெளியாகியுள்ளன.
திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் தளப் பதிவில் ஸ்டாலின் தோற்றது பற்றி தனது வருத்தங்களைத் தெரிவித்துள்ளார். அதில், “வணக்கம் தமிழ்நாடு. காமராஜர் தோற்றார். மு. க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது. அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி பணிதான். தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
திமுக ஆதரவாகத் தொடர்ந்து பேசி வந்த பிரகாஷ் ராஜ் விஜய்யின் ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Actor Prakash Raj has posted about the DMK's defeat
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆளுநரின் நடத்தை அருவருக்கத்தக்கது! விஜய்க்கு ஆதரவாக பிரகாஷ் ராஜ் பதிவு
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!

ஹேப்பி ராஜ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மறுவரையறை மசோதா! விவாதம் செய்யத் தயாரா? - ஆந்திர துணை முதல்வருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் சவால்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

