தவெக தலைவர் விஜய்க்கு நடிகை காஜல் அகர்வால் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளிலும், திமுக 72 தொகுதிகளிலும், அதிமுக 55 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
பல இடங்களில் தவெக வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
தேர்தலில் முன்னிலை வகித்துவரும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து நடிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தப் பதிவில் ”நான் ஒரு தடவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி என்ற வசனத்தைப் போல மக்கள் நம்பிக்கையுடன் அதனை எதிரொலித்துள்ளனர். இந்த மகத்தான, அற்புதமான வெற்றியைப் பெற்ற விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
தமிழ்நாட்டு மக்கள் அவர்களின் தீர்ப்பை அளித்துவிட்டனர். இது சாதாரண வெற்றியல்ல. இந்தப் புதிய அத்தியாயத்தில் நீங்கள் அடியெடுத்து வைக்கும் வேளையில், உங்களுக்குப் பெருமளவு வலிமை கிடைக்கவேண்டும் என வாழ்த்துகிறேன். கோடிக்கணக்கான மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் மாற்றத்தை நீங்கள் கொண்டுவருவீர்கள் என நம்புகிறேன். இந்த மகத்தான சாதனைக்கு உங்களை மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய சினிமா இதுவரை பார்க்காத ஒன்று... ராமாயணா படத்தைப் பாராட்டிய காஜல்!

முதல்வராகப் பதவியேற்க உள்ள விஜய்க்கு திருமாவளவன் வாழ்த்து!

விஜய்க்கு ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் வாழ்த்து!
தருணத்துக்காகக் காத்திருந்த வரலாறு: விஜய்க்கு சிலம்பரசன் வாழ்த்து!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

