புதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

விஜய் வெல்ல வேண்டும்: ஐஸ்வர்யா லட்சுமி

விஜய் குறித்து ஐஸ்வர்யா லட்சுமி....

News image

விஜய், ஐஸ்வர்யா லட்சுமி

Updated On :3 மே 2026, 12:30 pm IST

நடிகரும் தவெக தலைவருமான விஜய் தேர்தலில் வெல்ல வேண்டுமென ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி செய்யப்போவது யார் என்கிற கேள்வி தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடைபெற்று முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் நாளை (மே. 4) வெளியாகவுள்ளது.

தமிழக அரசியலில் திமுக கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, தவெக, நாம் தமிழர் என மோதல் இருந்தாலும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்றே கூறியுள்ளன.

இருப்பினும், விஜய்யின் தவெக எதிர்பாராத வெற்றியைப் பதிவு செய்தால் ஆட்சி மாற்றத்திற்கும் வாய்ப்பு இருப்பதாக ஊகமும் எழுந்துள்ளது. விஜய் வெல்ல வேண்டும் என அவரது ரசிகர்கள், தொண்டர்கள், விசில் சின்னத்திற்கு வாக்களித்தவர்கள் உள்பட பல தரப்பினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தனியார் கடைதிறப்பு நிகழ்வில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, “நடிகர், தவெக தலைவர் விஜய் தேர்தலில் வெல்ல வேண்டுமென மிகவும் ஆசைப்படுகிறேன். அதற்காக, கடவுளிடம் பிராத்திக்கிறேன். எனக்கு கேரளத்தில்தான் வாக்குரிமை உள்ளது. தமிழகத்தில் இல்லாமல் போய்விட்டது.

அவருக்கு வாக்களிக்க முடியாததை நினைத்து வருத்தமாக இருக்கிறது. தன்னை இந்த நிலைமைக்கு உயர்த்திய மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அவர் அரசியலுக்கு வந்தது எனக்கு மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.

Aishwarya Lakshmi has said that actor and Tvk leader Vijay should win the elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.