தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

இந்தியாவின் பெருமை அஜித் குமார்..! ஆதிக் ரவிச்சந்திரன் புகழாரம்!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பதிவு குறித்து...

News image

அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரன். - படம்: எக்ஸ் / ஆதிக் ரவிச்சந்திரன்.

Updated On :1 மே 2026, 3:33 pm IST

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் பிறந்த நாளில், “இந்தியாவின் மிகச்சிறந்த பெருமை” எனக் கூறி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித் மே 1, 1971ல் செகந்திராபாதில் (தற்போதைய தெலங்கானா) பிறந்தார். 1993ல் அமராவதி படத்தில் அறிமுகமான அஜித் குமார் தற்போது வரை 63 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேஸிங்கில் பங்கேற்று வருகிறார். அதனால், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். தற்போது, அஜித்தின் 64ஆவது படத்தை இயக்கவிருக்கிறார்.

அஜித் பிறந்த நாளை முன்னிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருப்பதாவது:

பிறந்த நாள் வாழ்த்துகள் சார். இந்தியாவைப் பெருமைப் படுத்தியதுக்கும் எங்களுக்கு உத்வேகம் அளித்ததுக்குக்கும் நன்றி. நீங்கள் நாட்டின் மிகப்பெரிய பெருமை. எங்களின் பத்ம பூஷண்.

உங்களது கருணை, அன்பைப் பெருவதற்கு நான் எப்போதுமே அதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கிறேன். உங்களை சந்தித்த நாள் எனக்கு மிகவும் ஆசிர்வாதமானது. உங்களுடன் வேலைச் செய்தது, குட் பேட் அக்லி மூலமாக மறக்க முடியாத நினைவுகளைப் பகிர்ந்தது எல்லாமே கனவாக இருக்கிறது. மீண்டும் உங்களுடன் இணைந்து சிறப்பான நினைவுகளை உருவாக்க காத்திருக்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள் அஜித் குமார் சார் என்றார்.

Summary

You’re nation’s greatest pride ajith sir, says director Adhik Ravichandran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.