நடிகர் விமல் நடித்துள்ள வடம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சுவிரட்டு விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், கடந்த மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்தப் படத்தில் விமலுடன் நட்டி நட்ராஜன், சனஸ்கா ஸ்ரீ, முனீஸ்காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்’ நரேன், ஷரவண சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வி.கேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை மாசாணி பிக்சர்ஸ் சார்பில் ஆர். ராஜசேகர் தயாரித்துள்ளார்.
வடம் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பூஜை பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், வடம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ஏப். 3 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The OTT release date for the film Vadam, starring actor Vimal, has been officially announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சதீஷின் முஸ்தபா முஸ்தபா படத்தின் வெளியீட்டுத் தேதி!

லீடர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

தி கேரளா ஸ்டோரி - 2: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஹேப்பி ராஜ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


