இயக்குநர் மோகன். ஜியின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பின் அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அரசியலில் தீவிரமாக இயங்கி வருகிறார்.
தற்போது, சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தன்னை அதிமுக கூட்டணியில் இணைத்துக்கொண்டு திரு. வி. க நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். தலித் அரசியலை முன்னெடுக்கக் கூடியவர் என்பதால் பல சிறுபான்மை அரசியல் ஆதரவாளர்கள் பொற்கொடிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.
முக்கியமாக, இயக்குநரும் நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனருமான பா. இரஞ்சித் தன் ஆதரவைத் தெரிவித்ததுடன் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கூறியுள்ளார்.
அதேநேரம், அதிமுக உடன் பாஜகவும் இருப்பதால் பா. இரஞ்சித்தும் இந்த அரசியல் சமரசங்களில் இணைந்துவிட்டார் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக, ரஞ்சித்துக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு கொண்டவரான இயக்குநர் மோகன். ஜியும் பொற்கொடியை ஆதரித்திருப்பதால், இருவரும் ஒன்றிணைந்து விட்டனர் என சமூக வலைதளங்களில் சிலர் தாக்கி எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில், இதனைக் கண்ட மோகன். ஜி, “காலம் காலமா நீங்க கட்டமைத்த பிம்பம் அது.. நாங்க ரெண்டு பேரும் என்ன பரம்பரை எதிரியா.. சிந்தனை ஒரே இடத்தில் சேரும் போது, இருவரும் ஒருவரை ஆதரிப்பது என்ன தப்பு.. அந்த அம்மையார் வெல்லட்டும் .. உங்களை வெல்வதே எங்கள் நோக்கம்." எனத் தெரிவித்துள்ளார். இவரின் கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Director Mohan.g's post has gone viral on social media.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான் முதலமைச்சர் ஆகணும்... வைரலாகும் த்ரிஷா விடியோ!

விக்ரமே எதிர்பார்க்காத வைரல்!
மம்மூட்டியா? மோகன்லாலா? யார் சிறந்த நடிகர்? கவனம் ஈர்க்கும் விடியோ!
நடிகருடன் திருமணம்... தயாரிப்பாளர் பேச்சால் வெட்கப்பட்ட மிருணாள்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


