நடிகர் மம்மூட்டி நடிக்கும் மட்டஞ்சேரி மாஃபியா திரைப்படத்தின் பெயர் குறித்து சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இயக்குநர் கலித் ரஹ்மான் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி தன் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதில், பிரபல இளம் நாயகர்களான ஆசிஃப் அலி மற்றும் நஸ்லன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு, மட்டஞ்சேரி மாஃபியா எனப் பெயரிட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
அறிவிப்பு வெளியானதிலிருந்து பலரும் பெயரைக் குறிப்பிட்டு விவாதித்து வருகின்றனர்.
காரணம், மலையாள சினிமாவை கையில் வைத்திருப்பதே எர்ணாகுளம் மாஃபியா தான் என்கிற பேச்சுகள் இருக்கின்றன. குடும்பம் குடும்பமாக சினிமாவில் இருக்கும் குறிப்பிட்ட சிலர் ஒட்டுமொத்த மலையாள சினிமாவையும் அதிகாரம் செய்கின்றனர் எனக் கூறப்படுகிறது. எர்ணாகுளத்தைச் சேர்ந்த துறைமுகப் பகுதியான மட்டஞ்சேரியையும் குறிப்பிட்டு மாஃபியா என அழைக்கின்றனர்.

மம்மூட்டி, கலித் ரஹ்மான்
முக்கியமாக, இக்குழுவில் உள்ள பலரே தொடர்ந்து திரைப்படங்களில் போதைப்பொருளை ஊக்குவிக்கும் காட்சிகளை வைத்து அதனை கலாசாரமாக மாற்றி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர்களையே, ‘மட்டஞ்சேரி மாஃபியா’ என பேச்சு வழக்கில் குறிப்பிடுகின்றனர். நீண்ட காலமாக மலையாள சினிமாவில் மட்டஞ்சேரி மாஃபியா குறித்து பல விஷயங்கள் பகிரப்பட்டும் வருகின்றன.
இதனையே திரைப்படத்திற்கு பெயராக வைத்ததுடன் மூத்த தலைமுறையைச் சேர்ந்த மம்மூட்டி, இளைய தலைமுறையைச் சேர்ந்த ஆசிஃப் அலி, ஆல்பா தலைமுறைக்கு நஸ்லன் என தலைமுறையாகத் தொடர்வது எனும் அர்த்தத்தில் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது ரசிகர்களிடம் விவாதத்ததை ஏற்படுத்தியுள்ளது.
சிலர் இதனை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாலும், போதைப்பொருள் பயன்பாட்டில் கைதான கலித் ரஹ்மானைக் குறிப்பிட்டு, இப்படம் மூலம் ஏதாவது மறைமுகமாகச் சொல்லப்படும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Summary
mammootty's mattancherry mafia movie create discussion about malayalam movie industry
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விக்ரமே எதிர்பார்க்காத வைரல்!
மம்மூட்டியா? மோகன்லாலா? யார் சிறந்த நடிகர்? கவனம் ஈர்க்கும் விடியோ!

கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜிவி பிரகாஷ்!
பெயரே போதும்... மம்மூட்டியின் புதிய பட போஸ்டர்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

