நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்த ஹேப்பி ராஜ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் தயாரித்து நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, அவர் நடித்த பிளாக்மெயில் திரைப்படமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
தற்போது, நடிகர் பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், ஹேப்பி ராஜ் என்ற புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார்.
உறவுச்சிக்கல்களை நகைச்சுவை பாணியில் சொல்லும் இப்படம் வருகிற மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடிகை கௌரி பிரியாவும் முக்கிய கதாபாத்திரங்களில் அப்பாஸ் மற்றும் ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். விறுவிறுப்பான காதல் வசனங்களுடன் உருவாகியுள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!

கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜிவி பிரகாஷ்!
ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்: ஓடிடியில் எப்போது?

தந்தைகளுக்குச் சமர்ப்பணம்..! வரவேற்பைப் பெறும் ஜிவியின் ஹேப்பி ராஜ்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
