அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், ஆட்டம் டூரால்ட் அர்க்காபாவ் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
ஆஸ்கர் விருதுப் பட்டியலில், இத்தனை ஆண்டுகளாக சிறந்த ஒளிப்பதிவு என்ற விருதுக்குச் சொந்தக்காரர்களாக ஆண்கள் மட்டுமே இருந்த வந்த நிலையை மாற்றி, ஆட்டம் டூரால்ட் அர்க்காபாவ் (Autumn Durald Arkapaw), சின்னர்ஸ் (Sinners) திரைப்படத்தின் ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார். இதன் மூலம், ஆஸ்கர் விருது வரலாற்றில், இந்த விருதினைப் பெறும் முதல் பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
ஹாலிவுட் திரையுலகில், கேமராக்களுக்குப் பின்னால் ஒரு பெண்ணின் பிரதிநிதித்துவம் கவனம் பெறுவதில் சாதனையாகவும் இது மாறியிருக்கிறது. அவர் விருது பெற்ற தருணமும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக மாறியிருந்தது. தன்னை நம்பி இந்த படத்தை வழங்கிய தன்னுடைய திரைப்பட இயக்குநர் கூக்ளருக்கு அர்க்காபாவ் மனதார நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மிஸிஸிபியில் கடந்த 1930-களின் வழக்கத்தில் இருந்த காட்டேரி கதைகளை, "சின்னர்ஸ்" படத்தில் செட் அமைத்து அதனை குறிப்பிடத்தக்க பாணியில் காட்சிப்படுத்தியிருந்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சி, பரந்த-முறையிலான ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டிருந்தது. இந்தத் திரைப்படம், மிகச் சிறந்த காட்சி கதை சொல்லலுக்கான தனித்துவம் மிக்க அழகு மற்றும் பார்ப்பவர்களை பதற்றத்தில் வைக்கும் இரண்டையும் மிகச் சிறப்பாக செய்திருந்தது.
வெகு காலமாக திரைப்பட ஒளிப்பதிவு என்ற ஆண்களுக்கான துறையில், ஆஸ்கர் விருதின் மூலம், பெண் கலைஞர்களுக்கான கதவு திறக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தில் சிறந்த ஒளிப்பதிவை மட்டும் அவர் காட்சிப்படுத்தவில்லை, ஆஸ்கர் வரலாற்றிலும் அவரது பெயரை அவர் மிக அழகாக செதுக்கியிருக்கிறார் என்று பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
விருதுக்கு பின் ஆங்கில ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், என்னைப் போன்ற ஆசை கொண்ட பல சிறுமிகள் இன்றிரவு நன்றாக தூங்குவார்கள், ஏனென்றால் அவர்கள் ஒளிப்பதிவாளர்களாக மாற விரும்புகிறார்கள். இந்த மேடையில் நான் இருப்பது, இந்த விருது அல்லது திரைப்படத்துக்கான விருது பெறுவது, பல பெண்களின் வாழ்க்கையை மாற்றும் என்பதை நான் நன்கு அறிவேன், ஏனென்றால் ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பல சிறுமிகள் இதுவரை இல்லாத வகையில் புதிய உத்வேகம் பெறுவார்கள் என்று தன் மனதில் இருந்த ரகசியத்தைப் பகிர்ந்துகொண்டார்.
தன்னுடைய இந்த வெற்றிக்காக நின்ற அனைத்து பெண்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவித்துக் கொண்டார். இந்த விருது பெறும்வரைதான் அது எனக்குத் தொடர்புடையது, இனி இந்த விருது என்னைப் பற்றியது அல்ல. இது இன்னும் பலவற்றைப் பேசும். அது எனக்கு நன்றாகவே தெரியும் என்றார் மகிழ்ச்சியுடன்
Summary
Information about the first woman to win an Oscar for Best Cinematography, actress Duralt Arkabaugh.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏஐ திரைப்படங்களுக்கு ஆஸ்கர் கிடையாது!

சஞ்சு சாம்சனுக்கு சிறந்த வீரருக்கான ஐசிசி விருது!

ஆஸ்கர் விருது வென்ற முதல் பெண் ஒளிப்பதிவாளர்! யார் இந்த ஆட்டம் டுரால்ட் அர்க்காபாவ்?

அவதார், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், சின்னர்ஸ் படங்களுக்கு ஆஸ்கர் விருது!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


