தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மகளே என் மருமகளே தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

மகளே என் மருமகளே தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்பாக...

News image
Updated On :4 மார்ச் 2026, 2:07 pm IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகளே என் மருமகளே தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

மகளே என் மருமகளே தொடர் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத் தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி மாமியாராகவும் வர்ஷினி சுரேஷ் மருமகளாகவும் நடிக்கின்றனர். நாயகனாக நடிகர் அவினாஷ் நடிக்கிறார்.

மருமகள் மீது மிகுந்த பாசம் கொண்ட மாமியார், மாமியார் மீது அதிக அன்பு கொண்ட மருமகள், இருவருக்கு இடையே நிகழும் சம்பவங்களை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மகளே என் மருமகளே தொடரின் படப்படிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

இது குறித்து நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”படப்பிடிப்பின் கடைசி சில நாள்கள்” எனப் பதிவிட்டு விடியோவொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தத் தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள், பரபரப்பான திருப்புமுனைக் காட்சிகளுடன் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்தத் தொடர் ஆரம்பிக்கப்பட்டு 6 மாதங்களே ஆன நிலையில், 200 எபிசோடுகளைகூட மகளே என் மருமகளே தொடர் தாண்டாமல் நிறைவடையவுள்ளது.

இந்தத் தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Summary

The shooting of the series Magale En Marumagale, which will be aired on Vijay TV, has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.