நடிகர் சூர்யாவின் 50-வது திரைப்படத்தை இயக்க இயக்குநர் நெல்சனை அணுகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறார். இப்படத்தை வெங்கட் அட்லுரி இயக்கியிருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதன் தொடர்ச்சியாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கிவரும் சூர்யா - 47 திரைப்படமும் திரைக்கு வரவுள்ளதால் இந்தாண்டே மேலும் 2 வெளியீடுகளைக் காணவுள்ளார்.
அடுத்ததாக, இயக்குநர் த. செ. ஞானவேலுடன் சூர்யா தன் 48-வது படத்தில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இதில் சூர்யா சென்னையில் பிரபலமாக இருந்த 5 ரூபாய் டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.
இந்த நிலையில், சூர்யாவின் 50-வது திரைப்படத்தை இயக்க இயக்குநர் நெல்சனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் நெல்சன் தற்போது ஜெயிலர் - 2 படத்தை இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Reports indicate that director Nelson has been approached to direct actor Suriya's 50th film.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருப்பு ஓடிடி தேதி!

மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த சூர்யா!

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா... மீண்டும் ஒரு உண்மைச் சம்பவம்?

தீபாவளி வெளியீடாக சூர்யா - 47?
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


