தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தும் ஜோதிகா!

பாலிவுட் கதைகளைத் தேர்வு செய்யும் ஜோதிகா....

News image

ஜோதிகா

Updated On :14 ஜூன் 2026, 1:32 pm IST

நடிகை ஜோதிகா தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகை ஜோதிகா திருமணத்திற்குப் பின் நடிப்பதை நிறுத்தினார். குழந்தை வளர்ப்பு, அவர்களின் கல்விகளைக் கவனிப்பது போன்ற குடும்பப் பொறுப்புகளால் சினிமாவிலிருந்து விலகியிருந்தவர் 36 வயதிலே மூலம் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார்.

தொடர்ந்து, உடன் பிறப்பே, காதல் தி கோர் ஆகிய படங்கள் வெளியாகி ஜோதிகாவை மீண்டும் திரை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. தற்போது மும்பைக்குக் குடிபெயர்ந்து, ஹிந்தி திரைப்படங்கள், இணையத் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இறுதியாக, சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா நடிப்பில் சிஸ்டம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதற்கு முன் ஜோதிகா நடிப்பில் வெளியான சைத்தான், ஸ்ரீகாந்த் ஆகியவை வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றிருந்தது. டப்பா கார்டெல் இணையத் தொடர் மூலம் நல்ல நடிகை என்கிற பெயரும் கிடைத்தது. தற்போது, ஜோதிகாவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் தொடர்ந்து பாலிவுட் படங்களில் கதையம்சமுள்ள படங்களைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Actress Jyothika continues to focus on Bollywood films.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.