பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

டாக்ஸிக் படம் வெளியாவதில் சிக்கல்?

யஷ் நடிப்பில் உருவான டாக்ஸிக் திரைப்படம் இந்தாண்டு வெளியாகாது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image

யஷ்

Updated On :3 ஜூன் 2026, 10:06 pm IST

யஷ் நடிப்பில் உருவான டாக்ஸிக் திரைப்படம் இந்தாண்டு வெளியாகாது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் டாக்ஸிக். இப்படத்தை கீதா மோகன்தாஸ் இயக்க, ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ருக்மணி வசந்த், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு ஜூன் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என திடீரென அறிவிக்கப்பட்டது.

டீசர் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. படம் நேரடியாக ஆங்கிலத்திலும் வெளியாகவுள்ளதால், வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெறலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 4 வெளியிடப்படுவதாக இருந்த டாக்ஸிக் திரைப்படம், தேதி அறிவிக்கப்படாமல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜூன் 8 அன்று படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், டாக்ஸிக் படத்தின் இறுதி வடிவம் நடிகர் யஷ்-க்கு திருப்தியளிக்காததால், கூடுதலாக மேலும் 100 நாள்கள் மீண்டும் படப்பிடிப்பை நீட்டிக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுபற்றி படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக எந்தச் செய்தியும் வெளியிடவில்லை.

Summary

Reports suggest that Yash's film Toxic will not be released this year

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.