லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஹுமா குரேஷியின் மகாராணி சீசன் 5 படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகை ஹுமா குரேஷியின் மகாராணி சீசன் 5 படப்பிடிப்பு குறித்து...

Maharani Season 5 poster.

மகாராணி சீசன் 5 போஸ்டர். - படம்: எக்ஸ் / அஷ்வனி குமார்.

Published On :28 ஜூலை 2026, 8:31 pm IST

நடிகை ஹுமா குரேஷி தனது பிறந்த நாளில் மகாராணி இணையத் தொடரின் சீசன் 5 படப்பிடிப்பு தொடங்கியதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி (40 வயது) தமிழில் காலா திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர் அஜித்தின் வலிமை படத்திலும் நடித்திருக்கிறார்.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் படத்திலும் ஹுமா குரேஷி நடித்துள்ளார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று சிறப்புப் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

மகாராணி என்ற இணையத் தொடரின் முதல் பாகம் 2021ல் வெளியானது. அதன் வெற்றியைத் தொடர்ந்து 2022ல் சீசன் 2, 2024ல் சீசன் 3, 2025ல் சீசன் 4 வெளியாகி கவனம் பெற்றது.

தற்போது சீசன் 5 படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக நடிகை ஹுமா குரேஷி உறுதிப்படுத்தியுள்ளார். குடும்பத் தலைவியாக இருக்கும் ராணி பாரதி (ஹுமா குரேஷி) எதிர்பாராத விதமாக பிகாரின் முதலமைச்சராக மாறுவார்.

தொடக்கத்தில் விருப்பமில்லாமல் இருக்கும் அவர் பின்னர் அரசியலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் கதையாக அசாத்தியமான மாற்றங்கள் இந்தத் தொடரில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்தத் தொடரில் சோஹும் ஷா, அமித் சியால், வினீத் குமார், கனி குஸ்ருதி, இனாமுல்ஹக், அனுஜா சாத்தே மற்றும் ஸ்வேதா பாசு பிரசாத் நடித்துள்ளார்கள். இதனை சோனி லைவ் ஓடிடியில் பார்வையிடலாம்.

Summary

Huma Qureshi begins shooting for 'Maharani' season five

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.