சிறகடிக்க ஆசை தொடரில் நாயகனாக நடித்துவரும் நடிகர் வெற்றி வசந்த் படப்பிடிப்புதளத்தில் 2 மணிநேரம் அழுதுள்ளார். இதற்கான காரணம் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு சிறகடிக்க ஆசை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் கோமதி பிரியா நாயகியாகவும், இவருக்கு ஜோடியாக வெற்றி வசந்த், நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.

வெற்றி வசந்த் - படம் - இன்ஸ்டாகிராம்
இதுமட்டுமின்றி சுந்தர்ராஜன், அனிலா ஸ்ரீகுமார், சல்மா அருண், ப்ரீத்தா ரெட்டி, ஸ்ரீ தேவா உள்ளிட்ட பலரின் நடிப்பும் சிறகடிக்க ஆசை தொடருக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.
ஆடம்பரங்கள் ஏதுமின்றி இயல்பாக எடுக்கப்பட்டுவரும் சிறகடிக்க ஆசை தொடர், நடுத்தரக் குடும்பத்தின் பிரச்னைகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளதால், பலரும் கதையுடன் தொடர்புபடுத்திக்கொள்வதால், இத்தொடருக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

படப்பிடிப்பு தளத்தில் வெற்றி வசந்த் - படம் - இன்ஸ்டாகிராம்
நடிகர் வெற்றி வசந்த்தின் நடிப்பும் இயல்பான சராசரி குடும்பத்தைச் சேர்ந்தவரைப்போன்று இருப்பதால், சின்ன திரை விஜய் சேதுபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு வெற்றி வசந்த் அழுதுள்ளார்.

படம் - இன்ஸ்டாகிராம்
மிகவும் உருக்கமான வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்ததால், அன்றைய நாள் படப்பிடிப்பில் அழுது நடித்ததாகவும், ஆனால் காட்சியுடன் ஒன்றிவிட்டதால், அதன் பிறகும் அழுதுகொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் நாயக பிம்பம் ஏதுமின்றி, அனைவருடனும் பழகும் தன்மை கொண்ட வெற்றி வசந்த்தின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Summary
Serial Actor Vetri Vasanth cried for 2 hours during the shooting of Siragadikka Aasai serial
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனிநபரின் சக்தியைக் காட்டுங்கள்: வசந்த் ரவி
ஜெயிலர் - 2 படத்தில் வசந்த் ரவி! ஏன்?
தனுஷ் - 56 படத்திலிருந்து விலகிய ருக்மணி வசந்த்?

தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள்! டிஆர்பி பட்டியல் வெளியீடு!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


