
ஸ்பிரிட் படத்திலிருந்து தீபிகா படுகோனை நீக்கியது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம்!
நடிகை தீபிகா படுகோனை ஸ்பிரிட் படத்திலிருந்து நீக்கியது பற்றிய தயாரிப்பாளரின் விளக்கம்....

ஸ்பிரிட் பட போஸ்டர், தீபிகா படுகோன். - படங்கள்: இன்ஸ்டா / சந்தீப் வங்கா, தீபிகா படுகோன்.
நடிகை தீபிகா படுகோனை ஸ்பிரிட் திரைப்படத்திலிருந்து நீக்க பல்வேறு காரணங்கள் இருந்ததாக தயாரிப்பாளர் பிரணய் வங்கா பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
சந்தீப் வங்கா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் ஸ்பிரிட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பத்ரகாளி பிக்சர்ஸ் சார்பாக சந்தீப் வங்காவின் சகோதரர், டி சீரிஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க தொடக்கத்தில் தீபிகா படுகோன் தேர்வாகி இருந்தார். பின்னர் அவரது அதிகப்படியான வேண்டுகோள்களால் அவர் அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் தீபிகா படுகோனுக்குப் பதிலாக அனிமல் படத்தில் கவனம் பெற்ற ட்ரிப்தி டிம்ரி தேர்வானார். படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தச் சர்ச்சைக்கு தயாரிப்பாளர் பேசியிருப்பதாவது:
நடிகை தீபிகா படுகோன் நடிப்பு பிடித்ததாலேயே அவரை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தோம். அவருடன் ஓராண்டாகவே சந்தீப் பேசி வந்தார். நல்ல உறவிலும் இருந்து வந்தார். திடீரென அவர் அதிகமான சம்பளத்தைக் கேட்கிறார். பின்னர், குறைவான நேரம் மட்டுமே நடிப்பேன் என்கிறார். அடுத்ததாக, படத்தின் வெற்றியில் 10 சதவிகிதம் வேண்டும் என்கிறார்.
தீபிகாவின் நடவடிக்கைகள் சந்தீப்பிற்கு பிடிக்காததால் அவரை படத்தில் இருந்து நீக்கினார் என்றார். இவ்வளவு நிபந்தனைகளை விதித்த தீபிகா படுகோனை தெலுங்கு ரசிகர்கள் சமூக வலைதளைத்தில் விமர்சித்து வருகிறார்கள்.
Summary
Spirit producer about the reason for Deepika Padukones removal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







