
ஸ்பிரிட் படத்தில் டான் லீ இருக்கிறாரா? தயாரிப்பாளர் பதில்!
பிரபல தென் கொரிய நடிகர் டான் லீ குறித்து ஸ்பிரிட் படத்தின் தயாரிப்பாளர் கூறியிருப்பதாவது...

டான் லீ, ஸ்பிரிட் படத்தின் போஸ்டர். - படங்கள்: இன்ஸ்டா / டான் லீ, பத்ரகாளி பிக்சர்ஸ்.
ஸ்பிரிட் திரைப்படத்தில் பிரபல தென் கொரிய நடிகர் டான் லீ நடிக்கவில்லை என படத்தின் தயாரிப்பாளர் பிரணய் வங்கா விளக்கம் அளித்துள்ளார்.
சந்தீப் வங்கா இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் ஸ்பிரிட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை பத்ரகாளி பிக்சர்ஸ் சார்பாக சந்தீப் வங்காவின் சகோதரர், டி சீரிஸ் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க தென் கொரிய நடிகர் டான் லீ ஒப்பந்தம் செய்யப்படுவதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவ ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் பிரணய் வங்கா நேர்காணல் ஒன்றில் இது குறித்து கூறியிருப்பதாவது:
இந்தப் படத்தில் டான் லீ நடிக்கிறார் என்பது ரசிகர்கள் கிளப்பிவிட்டது. நாங்களும் சரி இதை முயற்சித்துப் பார்க்கலாம் என்றாலும் பொருளாதார ரீதியாகவும் சரி கதை ரீதியாகவும் சரி ஒத்துவரவில்லை. அவர் போன்ற ஒருவரை சாதாராண கதையில் நடிக்க வைக்க முடியாது.
இந்தப் படம் ஹைதராபாதில் நடக்கும் கதையாக இருக்கிறது. இதில் வெளிநாட்டு நடிகரை நடிக்க வைக்க முடியாது என சந்தீப் கருதுகிறார் எனக் கூறினார்.
Summary
South Korean actor Don lee is not part of the Spirit Film confirmed by Producer
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







