தும்பாட் - 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர்கள் ரஹி அனில் பார்வே மற்றும் ஆனந்த் காந்தி ஆகியோரின் இயக்கத்தில் உருவாகி கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படம் தும்பாட். ஹாரர் கதைக்களத்துடன் உருவான இப்படம் மறுவெளியீட்டிலும் மாபெரும் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் 2 ஆம் பாகமான தும்பாட் - 2 படத்தை இயக்குநர் ஆதேஷ் பிரசாத் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தை சோஹும் ஷா தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே உருவாகியுள்ள “தும்பாட் - 2” திரைப்படம் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் இன்று (ஏப். 29) அறிவித்துள்ளனர்.
முன்னதாக, பூமாதேவியின் மூத்த மகனான ஹஸ்தர் எனும் கடவுளை மையமாகக் கொண்டு தும்பாட் எனும் கிராமத்தில் நடைபெறும் இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
The release date for the film Tumbbad 2 has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மே. 27-ல் துருவ நட்சத்திரம்?

ராம் சரணின் பெத்தி பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

துருவ நட்சத்திரம் வெளியீட்டுத் தேதி இதுவா?
29 வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


