தனுஷ் நடித்துள்ள கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘கர’. போர் தொழில் படம் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.
நாயகியாக மமிதா பைஜுவும் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சுராஜ், ஜெயராம், கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
கர திரைப்படம் வருகிற ஏப்ரல் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், அந்தப் படத்தை வெளியிட தடை விதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சேலம் பூவாய் அம்மன் படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வேங்கை அய்யனார் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், 3 ஆண்டுகளுக்கு முன்பே ‘கர’ என்ற தலைப்பை அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ததாகக் கூறியுள்ளார்.
மேலும், இந்தப் பெயரை மாற்றாமல் படத்தை வெளியிடக்கூடாது என்றும் வழக்கில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Lawsuit seeking to ban the release of the film 'Kara'!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை ஜூன் 15-க்குள் வெளியிட அனுமதி வழங்கி உத்தரவு

கன்னக்குழியா பாடல்!

கோயில்களில் அன்னதானம் திட்டம்: தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி
துரந்தர் - 2 படத்திற்குத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
