நடிகை ரித்விகா இன்ஸ்டா பக்கத்தில் தனது திருமணம் குறித்த ரசிகர்களின் கேள்விக்கு, “அது நினைத்தபடி நடக்கவில்லை” எனக் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
பாலாவின் பரதேசி படத்தில் அறிமுகமானாலும் மெட்ராஸ் படத்தின் மூலம் கவனம் பெற்றார். பின்னர், கபாலி, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, டிஎன்ஏ படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
பிக்பாஸ் 2 சீசனில் பங்கேற்ற நடிகை ரித்விகா மக்கள் மனதில் இடம்பிடித்து, சிறந்த போட்டியாளராகச் செயல்பட்டு வெற்றியாளராக மாறினார். கடைசியாக இவரது நடிப்பில் தண்டகாரண்யம் திடைப்படம் வெளியானது.
திறமையான நடிகையாக இருந்தும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கின்றன. இந்த நிலையில், கடந்தாண்டு அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.
பின்னர், திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது இதனை ரித்விகாவே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த ரித்விகா. - படம்: இன்ஸ்டா / ரித்விகா.
இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்வி பதில் உரையாடலில், “உங்கள் திருமணத்தில் ஏதும் பிரச்னையா?” எனக் கேள்வி கேட்கப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த ரித்விகா, “நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.
Summary
Things didn't work says actress Riythvika about her wedding plan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நடிகை ஜனனி ஐயர் திருமண ஆல்பம்

விமானியை மணந்தார் நடிகை ஜனனி!

சாகசம் செய்து பிறந்த நாள் கொண்டாடிய நடிகை மதுமிதா!

பிறந்தநாளில் வயதை அறிவித்த சிங்கப் பெண்ணே நாயகி!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

