நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த பேட்ரியாட் சென்சார் குறித்து தயாரிப்பாளர் பேசியுள்ளார்.
மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்மூட்டி நீண்ட காலத்துக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் “பேட்ரியாட்”. இப்படத்தை, முன்னணி இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார்.
நடிகர்கள் குஞ்சக்கோ போபன், ஃபஹத் ஃபாசில், நயன்தாரா, ரேவதி, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார்.
மே 1 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரைலர் அசத்தலாக இருந்ததால் வெளியீட்டின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், இப்படம் மத்திய தணிக்கை வாரியத்தால் சில சென்சார் பிரச்னைகளைச் சந்தித்துள்ளதாகக் கூறப்பட்டது. முக்கியமாக, படத்தில் அரசியல்வாதி ஒருவரின் பெயர் வில்லனுக்கு வைக்கப்பட்டதை மாற்றச் சொல்லி தணிக்கை வாரியம் கூறியதாகத் தகவல் வெளியானது.
தற்போது, இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரான ஆண்டனி ஜோசப் மறுப்பு தெரிவித்துள்ளார். குறிப்பாக, வில்லனின் பெயர் மற்றும் மற்ற தணிக்கை தகவல்கள் எதுவும் உண்மையில்லை என்றும் சில மாறுதல்கள் சொல்லப்பட்டுள்ளன அதை சரிசெய்ய உள்ளோம் என்றும் கூறியுள்ளார். இதனால், தணிக்கை பிரச்னை எதுவும் இல்லை என்று உறுதியாகியுள்ளது.
The producer has spoken regarding the censorship of Patriot, the film starring actors Mammootty and Mohanlal in lead roles.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கலவையான விமர்சனங்களைப் பெற்ற பேட்ரியாட்! வசூல் எவ்வளவு?

ஆச்சரியப்படுத்தும் பேட்ரியாட் டிரைலர்!

தள்ளிப்போகும் மோகன் லால் - மம்மூட்டியின் பேட்ரியாட் வெளியீடு!

லாஸ் ஏஞ்சலீஸ் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படும் மம்மூட்டி - மோகன்லாலின் பேட்ரியாட்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


