மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

எல்ஐகே - பிரதீப்பின் முதல் தோல்வி?

எல்ஐகே திரைப்படம் குறித்து...

News image

பிரதீப் ரங்கநாதன் - x

Updated On :22 ஏப்ரல் 2026, 6:00 pm IST

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே திரைப்படம் போதிய வரவேற்பு கிடைக்காமல் வெற்றியைப் பெறவில்லை.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் எல்ஐகே. முற்றிலும் ஏஐ, ரோபோ தொழில்நுட்ப விஷயங்களைக் கொண்டு கதையாக உருவான இப்படம் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

புதுமையான விஷயங்களைக் கதைக்குள் பொருத்தினாலும் கதையாகவும் திரைக்கதையாகவும் சோர்வைத் தரும் காட்சிகள் இருந்ததாலும் எங்கும் உணர்வுப்பூர்வமாக மாறாததாலும் இப்படம் எதிர்பார்த்த திருப்தியைக் கொடுக்கவில்லை என பிரதீப் ரசிகர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

மேலும், வசூல் ரீதியாக இப்படம் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்பட்டாலும் திரையரங்கு டிக்கெட் விற்பனைகள் சிறப்பாக இல்லையென்றே கூறப்படுகின்றன.

இதனால், ரசிகர்களும் பிரதீப் ரங்கநாதனின் முதல் தோல்விப்படமாக இதுவே இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரதீப் அடுத்ததாக மீண்டும் மைத்ரி மூவிஸ் நிறுவனத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pradeep Ranganathan's film LIK failed to achieve success, as it did not receive a sufficient reception.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.