கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் தொடர் பிரபலம் பாப்ரி கோஷ் இணைந்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் - 2 தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
கார்த்திக் ராஜு, வைஷ்ணவி சதிஷ், ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். கார்த்திகை தீபம் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, இரண்டாம் பாகம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தத் தொடர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் கார்த்திகை தீபம் தொடர் டிஆர்பியில் முன்னணியில் உள்ளது.
மேலும் இந்தத் தொடரில் மீரா கிருஷ்ணா, அஷ்வந்த் திலக், விஜயகுமார், வடிவுக்கரசி, ஃபாத்திமா பாபு, கிருத்திகா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
அண்மையில் கார்த்திகை தீபம் தொடரில் நடிகை கெளசல்யா இணைந்து, காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பாண்டவர் இல்லம் நடிகை பாப்ரி கோஷ் கார்த்திகை தீபம் தொடரில் இணைந்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் பிரியா என்ற புதிய பாத்திரத்தில் இணைந்துள்ளார்.
பாப்ரி கோஷ் - யார் இவர்?
விஸ்வாசம், சர்கார், பைரவா உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பாப்ரி கோஷ். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி தொடர் மூலம் சின்ன திரையில் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து பாண்டவர் இல்லம் தொடரில் நடித்து, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். பின்னர், சித்தி - 2, மகராசி, வானத்தைப் போல, கண்ணேதிரே தோன்றினால், திருமகள் உள்ளிட்ட தொடர்களில் நடித்தார்.
கலைஞர் தொலைக்காட்சியில் அண்மையில் நிறைவடைந்த காத்து வாக்குல ரெண்டு காதல் தொடரிலும் பாப்ரி கோஷ் தொடரில் நடித்திருந்தார்.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கெளரி தொடரிலும் பாப்ரி கோஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
Papri Ghosh, a popular star from the series Pandavar Illam, has joined the cast of the series Karthigai Deepam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சின்ன மருமகள் தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

ஆன்மிக தொடரில் களமிறங்கிய பிரியங்கா நல்காரி! போஸ்டர் வெளியானது!

பக்தித் தொடரில் நடிக்கும் விஜய் பட நாயகி!

தெலுங்கு தொடரில் நாயகியாகும் தமிழ் சீரியல் நடிகை!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


