இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா - 3 திரைப்படத்திற்கான திட்டத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழில் ஸ்டைலான மேக்கிங் திறன் கொண்ட இயக்குநர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். ஜிகிர் தண்டா, மகான், ஜகமே தந்திரம், ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய திரைப்படங்களில் உருவாக்க ரீதியாகவும் கவர்ந்தார்.
இறுதியாக, இவர் இயக்கத்தில் வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால், சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜை ரசிகர்கள் விமர்சித்தனர்.
தொடர்ந்து, புதுமுக நடிகர்களை வைத்து சுயாதீன படமொன்றை இயக்கி முடித்துள்ளார். இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டு பின் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “ஜிகர்தண்டா - 3 திரைப்படத்திற்கான திட்டம் இருக்கிறது. அதற்கான கதைக்கருவும் இருப்பதால் கண்டிப்பாக எடுப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படங்களிலேயே ஜிகர்தண்டாவுக்கு இந்தியளவில் கவனம் கிடைத்தது. காரணம், பல இயக்குநர்களே இப்படத்தைப் பாராட்டியுள்ளனர். ஆவேஷம் திரைப்படத்தை இயக்கிய ஜித்து மாதவன், நகைச்சுவையுடன் கூடிய கேங்ஸ்டர் திரைப்படங்களில் ”ஜிகர்தண்டா” ஒரு பென்ஞ் மார்க் சினிமா. அதனுடைய தாக்கம் இல்லாமல் அந்த வகையில் படத்தை எடுக்க முடியாது எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
director karthik subbaraj confirms he will do jigarthanda 3 movie
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தன்னம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக்..! மனம் திறந்த தேவ்தத் படிக்கல்!

முத்துராமலிங்கம் படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்: கௌதம் ராம் கார்த்திக்
நீளிரா படத்தின் ஓடிடி ஒப்பந்தம் முடிவாகவில்லை: கார்த்திக் சுப்பாராஜ்

படப்பிடிப்பை முடித்த கார்த்திக் சுப்புராஜ்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


